டெல்லி:இந்திய குடிமக்களின் ஆரோக்கியத்தை விட மத்திய விஸ்டா திட்டம் முக்கியமானதுதானா என்பதை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி மத்திய அரசிடம் தெரிந்து கொள்ள முயன்றார்.
ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஒரு காணொலியில், மத்திய விஸ்டா திட்டத்தை அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் வகைப்படுத்தியதன் பின்னணியில் உள்ள நிலவரம் குறித்து பிரியங்கா கேட்டார்.
2023 ஆம் ஆண்டில் அதை நிறைவு செய்வதற்காக இரவும் பகலும் உழைக்கும் மக்களுடன், குழப்பம், பயம், நிச்சயமற்ற தன்மை ஆகியவை நாடு முழுவதும் பெருமளவில் வளர்ந்தன எனக் குறிப்பிட்ட அவர், 'மக்களுக்கு இது மிகவும் முக்கியமா' என்று வினா தொடுத்தார்.
மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகளை 46 விழுக்காடும், வென்டிலேட்டர் படுக்கைகள் 28 விழுக்காடும், ஆக்சிஜன் படுக்கைகளை 36 விழுக்காடும் செப்டம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரை குறைந்துள்ளன என்றார்.
ஒவ்வொரு வல்லுநரும் அரசிடம் இரண்டாவது அலை இருக்கப்போகிறது என்று எச்சரித்திருந்தார் என்று சுட்டிக்காட்டிய பிரியங்கா, அரசு அனைத்து ஆலோசனைகளையும் தொடர்ந்து புறக்கணித்தது எனக் குற்றஞ்சுமத்தினார்.
"அவர்கள் (பாஜக) ஆட்சிக்கு வந்ததும், அவர்கள் சுகாதார நிதிநிலை அறிக்கையை 20 விழுக்காடு குறைத்தனர். அவர்கள் அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸுக்கு வாக்குறுதியளித்தனர்.
மாவட்ட சுகாதார வசதிகளை மேம்படுத்துவதாக அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை" என்று அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார் பிரியங்கா காந்தி.