தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா 75 - மக்கள் மனதில் விடுதலை தீயை மூட்டிய பால கங்காதர திலகர்

நாடு தற்போது 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிவரும் இந்த வேளையில், திலகரின் விடுதலை வாழ்வு மக்கள் மனதில் நீங்காது நிலைத்து நிற்கிறது.

லோகமான்ய திலகர், பால கங்காதர திலகர்
லோகமான்ய திலகர், பால கங்காதர திலகர்

By

Published : Nov 7, 2021, 6:57 AM IST

சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை நான் நிச்சயம் பெறுவேன் என்று ஆங்கிலேயர்களிடம் முழங்கியவர் லோக்மான்ய பாலகங்காதர திலகர். இந்திய விடுதலைப் போரில் இவரின் பங்கு அளப்பறியது. மராத்தா மற்றும் கேசரி ஆகிய நாளிதழ்களில் இவர் எழுதிய தீப்பிழம்பான எழுத்துக்கள் மக்கள் மனதில் விடுதலைத் தீயை மூட்டியது. இதன் காரணமாகவே, இவர் இந்தியாவின் முக்கியக் கலகக் குரலாக் கருதப்பட்டார்.

1856ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி ரத்னகிரி பகுதியில் லோக்மான்ய திலகர் பிறந்தார். 1866ஆம் ஆண்டு அவரது பெற்றோர் ரத்னகிரியிலிருந்து புனைவுக்குக் குடிபெயர்ந்தனர்.

இவருக்கு சத்யபாமா என்பவருடன் 1871ஆம் ஆண்டு திருமணம் ஆகிறது. 1872ஆம் ஆண்டு மெட்ரிக்குலேஷன் படிப்பை முடித்து புனே டெக்கான் கல்லூரியில் பிஏ பட்டப்படிப்பை முடிக்கிறார். கல்லூரியில் அகர்கர் என்பவருடன் நட்பு கொள்ளும் திலகர் அவருடன் இணைந்து விடுதலை போராட்டத்தில் களம் காணத் தொடங்குகிறார்.

மக்கள் மனதில் விடுதலை தீயை மூட்டிய லோகமான்ய திலகர்

அகர்கருடன் இணைந்து ஆர்ய பூஷண் என்ற அச்சகத்தைத் தொடங்கும் திலகர், கேசரி, மராத்தா என இரு நாளேடுகளைத் தொடங்குகிறார். கேசரி நாளேடு மராத்தியிலும், மராத்தா நாளேடு ஆங்கிலத்திலும் வெளியானது. கேசரியின் ஆசிரியராக அகர்கரும், மராத்தாவின் ஆசிரியராகத் திலகரும் செயல்பட்டனர்.

நாளடைவில் அகர்கருடன் ஏற்பட்ட முரண் காரணமாகக் கேசரி நாளேட்டை வாங்கிய திலகர், இரு நாளேட்டையும் நடத்தத் தொடங்கினார். 1881ஆம் ஆண்டு முதல் 1920 வரையில் நாற்பது ஆண்டுகளில் 513 கட்டுரைகளைத் திலகர் எழுதியுள்ளார்.

இவை அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆங்கிலேய அரசின் மீது இவர் வைத்த கறாரான விமர்சனங்கள் திலகருக்குச் சிறைவாசம் தேடித்தந்தன. இருந்தாலும் இவரின் எழுத்துக்களை ஆங்கிலேய அரசால் நிறுத்திவைக்க முடியவில்லை.

1905ஆம் ஆண்டு நிகழந்த் வங்கப்பிரிவினைக்குப்பின், நாடு முழுவதும் கலவரம் வெடித்து வன்முறை போராட்டங்கள் அரங்கேறின. மக்களிடையே ஏற்பட்ட உணர்வெழுச்சிய உணர்ந்த திலகர், சுதேசி, புறக்கணிப்பு, தேசிய கல்வி, சுவராஜ்ஜியம் ஆகிய நான்கு முழக்கங்களை முன்வைத்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் முயற்சியாக கணேஷ் உத்சவ் போன்ற விழாக்களை நடத்தினார்.

நாடு தற்போது 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிவரும் இந்த வேளையில், திலகரின் விடுதலை வாழ்வு மக்கள் மனதில் நீங்காது நிலைத்து நிற்கிறது. நாட்டிற்கா தனது வாழ்வை அர்ப்பணித்த லோக்மான்ய திலகருக்கு இந்த வேளையில் நாம் அஞ்சலியைச் செலுத்துவோம்.

இதையும் படிங்க:இந்தியா 75 - ஒடிசா பழங்குடி மக்களின் நாயகன் லக்ஷ்மன் நாயக்

ABOUT THE AUTHOR

...view details