தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 4, 2022, 8:06 PM IST

ETV Bharat / bharat

யார் இந்த சைரஸ் மிஸ்திரி..? - சில குறிப்புகள்

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மும்பை அருகே சாலை விபத்தில் இன்று (செப்.4) மாலை உயிரிழந்தார். அவரைப் பற்றிய சுவாரசியமான சில குறிப்புகள்.

யார் இந்த சைரஸ் மிஸ்திரி..? : சில குறிப்புகள்
யார் இந்த சைரஸ் மிஸ்திரி..? : சில குறிப்புகள்

மும்பை:டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான இந்தியாவில் பிறந்த ஐரிஷ் தொழிலதிபருமான சைரஸ் மிஸ்திரி இன்று (செப். 4) மும்பை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். மும்பையிலிருந்து அலஹாபாத்திற்கு காரில் சென்று கொண்டிருக்கும்போது சூர்யா நதியின் மேல் உள்ள பாலத்தில் இந்த விபத்து நடந்தேறியது. தற்போது அவரைப் பற்றிய சில சுவாரசியமான குறிப்புகளைக் காண்போம்.

  • சைரஸ் மிஸ்திரி, செழுமையான ஓர் பார்சி குடும்பத்தில் 1968ஆம் ஆண்டில் மும்பையில் பிறந்தார். இவர் கட்டடத் தொழிலில் தலை சிறந்த பல்லோஞ்சி மிஸ்திரியின் இளைய மகனாவார். இவரின் தாத்தா சபூர்ஜி மிஸ்திரி மாபெரும் தொழிலதிபர். இந்தக் குடும்பம் டாடா சன்ஸ் குழுமத்தில் 18.5 சதவீத பங்கினைப் பெறுகிறது. இது ஒரு தனிப் பங்குதாரர் பெரும் பங்கில் மிகப் பெரியத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
  • அவரது ஆரம்பக் கல்வியை மும்பையில் பயின்ற மிஸ்திரி, தனது பட்டப்படிப்பை இம்பீரியல் கல்லூரியில் கட்டடப் பொறியியல் பயின்றார். இதற்கிடையில் லண்டன் வர்த்தகப் பள்ளியிலும் பயின்றார். மேலும், இவர் நிர்வாகத்தில் மாஸ்டர் பட்டப் படிப்பை லண்டன் பல்கலைக்கழகத்தில் 1996ஆம் ஆண்டில் பெற்றார்.
  • 1991ஆம் ஆண்டு முதல் சில காலம் தன் குடும்ப கட்டட நிறுவனமான சபூர்ஜீ பல்லோஞ்சி நிறுவனத்தில் பணிபுரிந்தபின், டாடா சன்ஸ் குழுமத்தில் செப்.1, 2006 ஆம் ஆண்டு முதல் தனது தந்தை நிறுவனத்திலிருந்து பணி ஓய்வு பெற்றபின் சேர்ந்தார். அதன்பின், 2012ஆம் ஆண்டு ரதன் டாடாவிற்கு அடுத்து குழுமத்தின் தலைவரானார்.
  • இதனையடுத்து, 2016ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு வழியாக டாடா குழுமத்தின் தலைவர் எனும் பதவியை மிஸ்திரியிடமிருந்து பறித்தனர். இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் மிஸ்திரியின் குடும்பத்திற்குச் சொந்தமான இரண்டு நிறுவனங்கள் டாடா குழுமத்தின் நிர்வாக சீர்குலைவால் NCLATற்கு (

    National Company Law Appellate Tribunal

    ) போனது.
  • சைரஸ் மிஸ்திரி ரொஹிஃகா சாக்லா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பின் தன் மனைவி மற்றும் இரு மகன்களான ஃபிரோஸ் மிஸ்திரி, சஹான் மிஸ்திரி ஆகியோருடன் ஐயர்லாந்து சென்று ஐரிஷ் குடிமகனாக வாழ்ந்து வந்தார்.

ABOUT THE AUTHOR

...view details