தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா போரில் அண்டை நாடுகளுக்கு ஆதரவு கரம் நீட்டிய இந்தியா:உலக சுகாதார அமைப்பு பாராட்டு

ஜெனீவா: பூடான், மாலத்தீவு, நேபாளம், மியான்மர், பங்களாதேஷ் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்கியதற்காக இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

PM Modi
பிரதமர் மோடி

By

Published : Jan 23, 2021, 8:56 PM IST

கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக உலகமே போராடிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை உலக சுகாதாரா அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கரோனாவுக்கு எதிராக தொடந்து செயலாற்றும் இந்தியாவிற்கும், அதன் பிரதமர் நரேந்திரமோடிக்கும் நன்றி. நாம் அனைவரும் அறிவை பகிர்ந்து ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே வைரஸ் பரவலைத் தடுத்து வாழ்வாதாரத்தையும், கூடவே பலருடைய உயிரையும் காப்பாற்றமுடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் நட்பு நாடுகளான பூடான், மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை கோவிஷீல்ட் தடுப்பூசி சீஷெல்ஸ், மொரீஷியஸ், மியான்மருக்கு விமானம் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. சவூதி அரேபியா, மொராக்கோ, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு ஒப்பந்த முறையிலும் அனுப்பிவைக்கப்படுகிறது.

இதையும் படிங்க:மோடி இருந்தும் அசரவில்லை - சொல்லவந்ததை சொல்லி அரங்கை அதிரவைத்த மம்தா!

ABOUT THE AUTHOR

...view details