பெங்களுளூ:இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து, மத்திய அரசு கரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாள்களில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றுமுதல் புதிய கட்டுப்பாடுகள்
- இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- மாநில அரசு அலுவலகங்கள் 50 விழுக்காடு அலுவலர்களுடன் இயங்கும்.
- வார இறுதி நாள்களில் பேருந்துப் போக்குவரத்து, மெட்ரோ சேவை குறைக்கப்படும்.
- இன்றுமுதல் பெங்களூரு நகரில் 10, 11, 12ஆம் வகுப்புகள் தவிர மற்ற வகுப்பினருக்குப் பள்ளிகள் செயல்படாது; கல்லூரிகள் மூடப்படுகின்றன. மருத்துவம் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரிகள் மட்டும் செயல்படும்.
- திரையரங்குகள், மல்டிபிளக்ஸ், கலையரங்கங்களில் 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
- கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50 விழுக்காடு இருக்கை வசதியுடன் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், உணவக விடுதிகள், மதுக்கூடங்கள், வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதி.
- திறந்த வெளியில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டும் பங்கேற்கலாம். விளையாட்டு மைதானத்தில் 50 விழுக்காட்டினர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
- வழிபாட்டுத் தலங்களில் கரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் அனுமதி. பிரசாதம் உள்ளிட்ட பொருள்கள் வழங்க அனுமதி இல்லை.
- மக்கள் அதிகம் கூடும் போராட்டங்கள், பேரணிகளுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திட்டமிட்டப்படி டிஎன்பிஎஸ்சி தேர்வு