ஹைதராபாத்:தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாம மாறி, பின்னர் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘பிப்பர்ஜாய்’ என பெயரிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், வருகிற 14ஆம் தேதி வடகிழக்கு பகுதியை நோக்கி நகரும் என தெரிவித்துள்ளது.
இவ்வாறு நகரும் இந்த புயலானது, குஜராத் மாநிலத்தின் செளராஷ்டிரா, கட்ச் மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை மாண்ட்வி கராச்சி இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், வருகிற 15ஆம் தேதி குஜராத்தின் ஜவாக் துறைமுகம் இடையே பிப்பர்ஜாய் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், போர்பந்தரின் தென்மேற்கு திசையில் இருந்து 290 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு மத்திய அரேபியக் கடல் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் புயல் மையம் கொண்டுள்ளது. அதேநேரம், ஜகவ் துறைமுகத்தின் தெற்கு - தென்மேற்கு பகுதியின் 360 கிலோ மீட்டர் தொலைவில் நள்ளிரவு 2.30 மணியளவில் புயல் மையம் கொண்டுள்ளது.
மேலும், நேற்று (ஜூன் 12) இரவு 11.30 மணியளவில் போர்பந்தரின் தென்மேற்கில் 310 கிலோ மீட்டர், தேவ்பூமி துவாரகாவின் தென்மேற்கு திசையில் 320 கிலோ மீட்டர் மற்றும் ஜகவ் துறைமுகத்தின் தெற்கு - தென்மேற்கு திசையில் 380 கிலோ மீட்டரில் மிகக் கடுமையான புயலாக இருந்தது, கடுமையான புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது மட்டுமல்லாமல், அந்த பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது.