ஸ்ரீநகர்: மேற்கு வங்கத்தைச் சார்ந்த லோகேஷ் குமார் என்ற நபர், ஜம்முவில், தான் வேலை பார்க்கும் வீட்டில் இருந்து கைத்துப்பாக்கியை திருடியதாக ஜம்மு காஷ்மீர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது குறித்து காவல் துறையினர், கைது செய்யப்பட்ட நபர் மேற்கு வங்கத்தில் உள்ள அலிபுர்துவார் பகுதியைச் சார்ந்தவர் என்றும், அவர் தற்போது ஸ்ரீநகரில் இருக்கும் இலாஹிபாக் என்ற பகுதியில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், கைதுப்பாக்கி உடன் லோகேஷ் குமார், ரீகல் சௌக் என்னும் இடத்தில் வைத்து காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தான் வீட்டு வேலை பார்க்கும் ஒரு முக்கிய பிரமுகரின் வீட்டில் இருந்து, தான் கைத்துப்பாக்கியை திருடியதும், அந்த கைத்துப்பாக்கி அனுமதி பெற்ற துப்பாக்கி என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.