இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து கண்டனங்களைப் பதிவுசெய்வதோடு போராட்டங்களையும் நடத்திவருகின்றனர்.
அந்த வகையில், பெட்ரோல் டீசல் விலையைத் தொடர்ந்து உயர்த்திவரும் மத்திய அரசைக் கண்டித்து மின் இருசக்கர வாகனத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பயணம்செய்தார்.