தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வங்காளிகள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் - மம்தா அறிவிப்பு - இந்தியாவில் இலவச தடுப்பூசி

மேற்கு வங்க மாநில மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Mamata Banerjee
Mamata Banerjee

By

Published : Jan 10, 2021, 3:26 PM IST

ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக மூன்று கோடி முன்களப் பணியாளர்கள், நாள்பட்ட நோய் கொண்ட 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் ஏப்ரல் மாநிலத்தில் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள மேற்கு வங்க மாநிலத்தில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கதிதல் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பிகார், தமிழ்நாடு, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இலவச தடுப்பூசி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்காக சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிட்ஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பிரதமருக்கு எதிராக அவதூறு கருத்து: கோ ஏர் விமானி பணிநீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details