தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பரபரக்கும் டெல்லி; மம்தா-கெஜ்ரிவால் சந்திப்பு! - அரவிந்த் கெஜ்ரிவால்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றபோது ஏற்பட்ட பரபரப்பை போல் மம்தா பானர்ஜியின் டெல்லி பயணமும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mamata Banerjee
Mamata Banerjee

By

Published : Apr 30, 2022, 2:13 PM IST

புது டெல்லி: அண்மையில் கோவாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கைகோர்த்து கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

தேசிய தலைநகர் டெல்லிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை (ஏப்.29) பயணம் மேற்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை (ஏப்.30) சட்ட கருத்தரங்கை தொடங்கிவைத்தார்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி டெல்லி சென்றுள்ளார். இந்த மாநாட்டில் மாநில முதலமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் சந்தித்துப் பேசினார். அண்மையில் ஆம் ஆத்மியும், திரிணாமுல் காங்கிரஸூம் கோவா சட்டப்பேரவை தேர்தலை கூட்டணி அமைத்து சந்தித்தன.

இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி இரு இடங்களில் வென்றிருந்தது. திரிணாமுல் காங்கிரஸிற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அண்மையில் மு.க. ஸ்டாலினின் டெல்லி பயணமும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : தாலிபான்களுடன் ஒப்பிட்ட பாஜக.. அடித்து நொறுக்கிய மம்தா.. மேற்கு வங்கத்தில் பரபரப்பு!!

ABOUT THE AUTHOR

...view details