தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வார ராசிபலன்: காதலில் வெற்றி காண உள்ள ராசிக்காரர் யார்..? - கடகம் ராசிபலன் இன்று

Weekly Rasipalan in tamil: ஜனவரி 7 முதல் 13 வரையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான வார பலன்களைக் காணலாம்.

Weekly Rasipalan in tamil
வார ராசிபலன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 8:15 AM IST

மேஷம்: இந்த வாரம் நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுவீர்கள். உங்களது மகிழ்ச்சியையும், துக்கங்களையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் சேர்ந்து மதம் சார்ந்த சுற்றுலா செல்லவும் திட்டமிடுவீர்கள். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மனதிற்கு அமைதி கிடைக்கும். நிலுவையில் இருந்த வேலைகளும் இந்த வாரம் நிறைவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் எம்பதால் உறவினர்கள் அனைவரும் வந்து செல்வார்கள். வீட்டை அலங்கரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடு இந்த வாரம் முடிவுக்கு வரும். இந்த வாரம் உங்கள் ஆர்வத்திற்கு ஏற்ப செயல்படுவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சிறிது நேரம் செலவிடுவிடுவதன் மூலம் நீங்கள் நிறைய கற்றுக்கொள்வீர்கள். இவை அனைத்தும் எதிர்காலத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து குடும்ப நலனுக்காக பாடுபடுவீர்கள். காதலிப்பவர்கள் அன்புடனும், அனுசரனையுடனும் தருணங்களை கழிப்பார்கள். இருவருக்குள்ளும் காதல் அதிகரிக்கும். இந்தவாரம் நீங்கள், புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவதன் மூலம் லாபம் ஈட்டுவீர்கள் மற்றும் உங்கள் நிதி நிலைமையை வலுப்படுத்துவீர்கள்.

எதிர்காலத்தில் பயனளிக்கக்கூடிய சில முதலீடுகளையும் செய்வீர்கள். தொழிலை முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். மாணவர்கள் கடினமாக உழைப்பதம் வாயிலாக தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். உடல் ஆரோக்கியமும் மேம்படும். உங்கள் அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். இந்த வாரம் நீங்கள், உங்கள் குடும்பத்துடன் வெளியில் செல்வீர்கள். அங்கு அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மிதுனம்:குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் காணப்படும். இந்த வாரம் சில வேலைகளில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் முழு ஆதரவு அளிப்பீர்கள். காதலிப்பவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் இந்த வாரம் வேலையில் பதவி உயர்வு கிடைத்து மகிழ்ச்சி அடைவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

வியாபாரம் செய்பவர்கள் சில புதிய திட்டங்களை செயல்படுத்துவார்கள். மாணவர்கள் வெற்றி பெறும் போட்டிக்கு தயாராக இருப்பதைக் காணலாம். உடல்நிலையில் பெரிய பாதிப்பும் ஏற்படாது. வானிலை காரணமாக, உங்கள் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகள் சிறிய அளவில் இருக்கும். இது உங்களை மிகவும் தொந்தரவு செய்யும். உங்கள் அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்தால், அது உங்களுக்கு நல்லது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கடகம்: உத்யோகத்தில் இருப்பவர்கள் வேலையில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களுடன் சிறிது நேரம் செலவிடுவீர்கள். இது உங்கள் மனதிற்கு அமைதியைக் கொடுக்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம், அது உங்களுக்கு கவலையைக் கொடுக்கும். அனுபவசாலிகளும் உங்கள் வியாபாரத்தில் சிறிது பணத்தை செலவிடுவார்கள். அவர்களின் அனுபவத்தால் உங்கள் கவலைகள் பாதியாக குறைக்கப்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலை, படைப்புத் துறைகளில் வளர்ச்சி உண்டாகும்.

வாழ்க்கைத் துணையுடன் தனியாக நேரத்தை செலவிடுவீர்கள். பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகள் வரும் என்பதால் உங்கள் மனதை மகிழ்ச்சியடையச் செய்யும். உடல் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள். இளைஞர்கள் இந்த வாரம் தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில் குறித்து மிகவும் உற்சாகமாக இருப்பார்கள். வேலை தேடி அலைந்து திரிபவர்களுக்கும் இந்த வாரம் நல்ல வேலை கிடைக்கும்.

சிம்மம்: காதலிப்பவர்கள் தாங்கள் காதலிப்பவருடன் காதலில் மூழ்குவதைக் காணலாம். ஒருவருக்கொருவர் அன்பான உறுதிமொழிகளையும், வாக்குறுதிகளையும் எடுத்துக்கொள்வார்கள். திருமணமானவர்கள் வாழ்க்கைத்துணையின் உதவியால் சில புதிய வேலைகளைச் செய்வார்கள். இதன் காரணமாக, அவர்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பார்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் செய்பவர்கள் தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

வருமான வாய்ப்புகள் அதிகரிப்பதன் மூலம் லாபம் ஈட்டுவீர்கள் மற்றும் உங்கள் நிதி நிலைமையை வலுப்படுத்துவீர்கள். வீடு, கடை, கட்டிடம் போன்றவற்றை வாங்க திட்டமிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உங்கள் அன்றாட வழக்கத்தில் யோகா பயிற்சியையும், தியானத்தையும் சேர்த்துக் கொள்வீர்கள். உணவில் கவனம் செலுத்துவீர்கள். இந்த வாரம் குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிடுவீர்கள்.

கன்னி: இல்லற வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். காதலிப்பவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். வியாபாரத்தில் சில புதிய திட்டங்களைத் தீட்டுவதன் மூலம் லாபம் ஈட்டுவதில் வெற்றியடைவீர்கள். பொருளாதார நிலை வலுப்பெறும். அலுவலகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வது உங்களுக்கு மிகவும் நல்லது. மாணவர்கள் போட்டிக்கு தயாராவார்கள். மாணவர்கள் அங்கும் இங்கும் கவனம் செலுத்துவதால், படிப்பில் குறைந்த கவனம் செலுத்துவார்கள்.

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் கவலைப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீட்டிலேயே பூஜை, கீதைப் பாராயணம், ஹவான் போன்றவை நடைபெறும் என்பதால், அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் அவர்களுடன் வெளியில் சென்று நேரத்தை செலவிடுவீர்கள். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த வாரமாக இருக்கும்.

துலாம்: உத்யோகத்தில் இருப்பவர்கள் வேலையில் முன்னேற்றம் ஏற்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். கல்வித் துறையிலும் முன்னேற்றம் காணப்படும். தொழிலை விரிவுபடுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவும் கிடைக்கும். வயதில் மூத்தவர்களின் ஆசி உங்களுக்கு இருக்கும். மனதில் பட்டதை தந்தையிடம் வெளிப்படையாக சொல்வீர்கள்.

அம்மாவுடன் மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். அது உங்கள் மனதிற்கு அமைதி கொடுக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிடுவதன் மூலமாக உங்கள் மகிழ்ச்சி மற்றும் துக்கங்களை பகிர்ந்து கொள்வீர்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய நேரம் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பணத்தை முதலீடு செய்ய முடிவு செய்வீர்கள்.

விருச்சிகம்:காதலிப்பவர்கள் தங்கள் உணர்வுகளை தாங்கள் காதலிப்பவரிடம் வெளிப்படுத்துவார்கள். இதன் காரணமாக, அவர்களின் உறவில் காதல் காணப்படும். வாழ்க்கைத் துணையுடன் அன்பான தருணங்களைக் கழிப்பீர்கள். வயது முதிர்ந்தவர்களின் ஆசீர்வாதத்துடன், நீங்கள் சில புதிய வேலைகளைத் தொடங்குவீர்கள். அதில் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு முழுமையாக ஆதரவளிப்பார்.

உங்கள் தொழில் குறித்து, நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். உத்யோகத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளை உரிய நேரத்தில் செய்து முடிப்பீர்கள். மாணவர்கள், சில கடினமான பாடங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு தெளிவு பெற ஆசிரியர்களின் உதவியை நாடுவர். உங்களுக்கு பிடித்த பாடங்களை படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் தடைபட்டிருந்த வியாபாரத் திட்டங்களை மீண்டும் தொடங்குவதில் இந்த வாரம் வெற்றி காண்பார்கள்.

தனுசு:கல்வித்துறையில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான, அமைதியான சூழ்நிலை நிலவும். வீட்டிற்கு ஒரு புதிய விருந்தினர் வருவதால் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும். உங்களின் திருமண யோசனைக்கு ஒப்புதல் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதால்,உறவினர்கள் அனைவரும் வந்து செல்வார்கள். குடும்பத்துடன் ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். அங்கு அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மன அமைதிக்காக தனியாக சிறிது நேரம் செலவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசு கிடைக்கும். இது உங்களை மிகவும் மகிழ்ச்சியாக்கும். உங்கள் அம்மாவிடம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். நண்பர் மூலம் வருமான வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்:ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு மனம் குழம்பிப்போகும். நீங்கள் ஒரு நல்ல மருத்துவரை அணுகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் காணப்படும். வாழ்க்கைத் துணையுடன் அன்பான தருணங்களை செலவிடுவீர்கள். வயது மூத்தவர்களின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும். மாணவர்கள் முழு கவனத்துடன் படிப்பார்கள். உங்களுக்கு பிடித்த சில தலைப்புகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள், ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குச் சென்று கல்வியைப் பெறலாம். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் புதிய கொள்கைகளைக் கடைபிடிப்பீர்கள். இந்த வாரம் நீங்கள் விரும்பாவிட்டாலும், எதையாவது செலவழிக்க வேண்டியிருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வீட்டை அலங்கரிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

கும்பம்:திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் பரபரப்பாக காணப்படுவார்கள். குடும்ப நலனுக்காக வாழ்க்கைத் துணையுடன் இணைந்து செயல்படுவார்கள். வயது மூத்தவர்களின் ஆசிர்வாதம் நிலைத்திருக்கும். காதலிப்பவர்கள் வாழ்வில் சில கஷ்டங்களை காண்பார்கள். உங்கள் கனவுகளில் ஒன்றை நிறைவேற்றுவீர்கள். இது உங்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய வாகனம் வாங்க அதிர்ஷ்டம் உண்டாகும்.

பொருளாதார நிலை வலுப்பெறும். ஒரு நல்ல நபரின் உதவியால் நிலுவையில் இருந்த வேலைகளை முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்தும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்தால் வளர்ச்சியைக் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். யோகா மற்றும் தியானம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில், உங்களுக்கு பயனளிக்கும் சில முதலீடுகளையும் செய்ய முடிவு செய்வீர்கள்.

மீனம்:இந்த வாரம் உங்களுக்கு நிறைய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். இதில் கிடைக்கும் லாபத்தின் மூலம் உங்கள் நிதி நிலையை வலுப்படுத்துவீர்கள். பணத்தை சேமிப்பதில் வெற்றி அடைவீர்கள். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் படிப்படியாக முன்னேற்றம் காணப்படும். வயதில் மூத்த உறுப்பினர்களின் ஆசீர்வாதத்தால் உங்கள் வாழ்க்கையில் சில புதிய வேலைகளைத் துவங்குவார்.

மாணவர்கள் போட்டிக்கு தயாராகுவார்கள். உங்களுக்குப் பிடித்த பாடங்களை ஆசிரியரின் உதவியோடு படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். பூஜை-பாராயணம், பஜனை-கீர்த்தனை போன்றவை ஏற்பாடு செய்யப்படும். இதில் உறவினர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்வார்கள். உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி, உங்களுக்கு பிடித்த செயல்களைச் செய்வீர்கள். உங்கள் மகிழ்ச்சி, துக்கங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.

ABOUT THE AUTHOR

...view details