தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Weekly Rasipalan: குடும்ப பிரச்னைகளைச் சந்திக்க உள்ள ராசிகள்! - வார ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இன்று (ஜூன் 11) முதல் வருகிற 17ஆம் தேதி வரையிலான வார ராசிபலன்களைக் காண்போம்.

வார ராசிபலன்கள்: ஜூன் 11 முதல் 17 வரை மேஷம் முதல் மீனம் வரையிலான ராசி பலன்கள்
வார ராசிபலன்கள்: ஜூன் 11 முதல் 17 வரை மேஷம் முதல் மீனம் வரையிலான ராசி பலன்கள்

By

Published : Jun 11, 2023, 7:07 AM IST

மேஷம்: திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் நிலவும் மன அழுத்தத்தில் இருந்து பெரிய அளவில் நிம்மதி அடைவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் எங்காவது செல்லத் திட்டமிடுவீர்கள். இதன் காரணமாக திருமண வாழ்க்கையில் சிறிது பிரகாசம் திரும்பத் தொடங்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவதில் வெற்றி உண்டாகும். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களும் தீர்ந்து நன்மை அடைவீர்கள்.

வேலை செய்பவர்களுக்கு வேலையில் பணி உயர்வு கிடைக்கும். ஒரு புதிய பணி உங்களுக்கு ஒதுக்கப்படலாம். அதேநேரம், வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வேலையில் லாபத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் கடின உழைப்புடன் செயல் திறனிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இப்போது பாடம் வாரியாக தனித்தனியே படிக்க திட்டமிட வேண்டும். உங்கள் ஆரோக்கியம் இப்போது நன்றாக இருக்கும்.

ரிஷபம்: திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் சில முரண்பாடுகளை உணருவார்கள். உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் இடையே மோதல்கள் ஏற்படலாம். அதே நேரத்தில் காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர் உங்களுக்காக அவரது உயிரையும் கொடுப்பார். நீங்களும் அவருக்காக ஓடோடி வருவீர்கள்.

மன உளைச்சல் குறையும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை சிறப்பாகவும், வலுவாகவும் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் பணித் துறையில் சிறந்த வெற்றியை எதிர்பார்க்கலாம். உங்களின் திறமை மற்றும் புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் சில புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும். மாணவர்கள் தங்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள், நீங்கள் கடினமாக உழைத்தால் வெற்றி பெறுவீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் இப்போது நன்றாக இருக்கும்.

மிதுனம்: உங்கள் திருமண வாழ்க்கை இந்த வாரம் மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குழந்தை வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறும். காதல் வாழ்க்கைக்கும் இந்த வாரம் சாதகமாக இருக்கும். இப்போது நீங்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியும். மேலும், சில பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். இப்போது பழைய கவலைகளில் இருந்து வெளியே வருவீர்கள். குடும்ப சூழ்நிலையும் திருப்திகரமாக இருக்கும்.

இருப்பினும், தவறான நேரத்தில் தவறான விஷயத்தைச் சொல்லி நீங்கள் ஒருவருடன் சண்டையிடலாம். இதில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு இப்போது சில செலவுகள் இருக்கலாம். உங்கள் அனுபவம் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள், தங்கள் தொழிலை முன்னெடுத்துச் செல்ல பக்க துணையாக யாராவது தேவைப்படலாம். மாணவர்கள் இப்போது தங்கள் படிப்பை அனுபவித்து மற்றும் விடாமுயற்சியுடன் படிப்பார்கள். நல்ல பலன்களையும் பெறுவார்கள். உங்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.

கடகம்: திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் அன்பும், அவற்றுடன் லேசான வாக்குவாதங்களும் கலந்து இருக்கும். அதேநேரம், காதல் வாழ்க்கையில் நல்லிணக்கம் பேணப்பட வேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் பேசிக் கொள்வீர்கள். இதனால் பிரச்னைகள் குறையும். இப்போது உங்கள் வருமானம் பெருமளவில் அதிகரிக்கும். எங்கிருந்து பணம் பெற்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. இது உங்கள் மகிழ்ச்சியைப் பெருக்கும்.

செலவுகளும் குறையும். அதன் காரணமாக பொருளாதார நிலை வலுப்பெறும். வியாபாரம் செய்பவர்கள் சில நண்பர்களின் ஆதரவைப் பெறுவார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். பெரிய காயம் ஏற்படவோ அல்லது அறுவை சிகிச்சை செய்யவோ வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்: திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத்துணையிடம் மனம் விட்டு பேசுவீர்கள். குடும்ப வாழ்க்கை சீராக இயங்கும் வகையில், அவர்களின் மனதின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதிர்ஷ்டமும் சற்று பலவீனமாக இருக்கும். இதனால் செய்யும் வேலைகள் தடைபடலாம். எனவே பெரிய வேலை எதையும் கையில் எடுத்து சிறிது நேரம் செலவிட வேண்டாம். வேலை செய்பவர்களுக்கு நேரம் முற்றிலும் சாதகமாக இருக்கும்.

உங்கள் பணியை சிறப்பாக செய்து முன்னேறுவீர்கள். மாணவர்கள் இப்போது தங்கள் படிப்பை அனுபவிக்கிறார்கள். புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளவும் முயற்சிப்பார்கள். இப்போது உங்கள் அறிவு அதிகரிக்கும். இதன் காரணமாக நீங்கள் மற்றவர்களை விட அதிக நன்மைகளைப் பெறுவீர்கள். இப்போது மன ரீதியாக பலவீனமாக உணர்வீர்கள்.

கன்னி: உங்களைப் பற்றி நீங்கள் அதிகம் சிந்திப்பீர்கள். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையின் மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவார்கள் மற்றும் வாழ்க்கைத் துணையின் குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பும் அதிகரிக்கும். உங்கள் உறவு மீண்டும் அழகாக மாறும். அதிர்ஷ்டம் முழுவதுமாக உங்கள் பக்கம் இருக்கும். இதன் காரணமாக வேலைகள் தொடர்ந்து நடைபெறும் மற்றும் உங்கள் நிலை பலப்படும்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் அவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். உங்கள் திறமை உங்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும். உங்கள் எதிரிகளை விட அதிக பலத்துடன் இருப்பீர்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும். படிப்பில் மெல்ல மெல்ல கவனம் செலுத்த வேண்டும். போட்டியிலும் வெற்றி பெறுவீர்கள். இந்த வாரம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

துலாம்: திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பார்கள். ஒன்றாக சேர்ந்து எங்காவது செல்ல திட்டமிடுவார்கள். காதலிப்பவர்களுக்கும் நேரம் சாதகமாக உள்ளது. ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது செய்யும் வேலையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்னும் சில பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, கவனமாக வேலை செய்யுங்கள். பிரச்னை ஏற்படுவதற்கான எந்த வாய்ப்பையும் கொடுக்காதீர்கள்.

இது உங்கள் மேலதிகாரிகளை உங்களுக்கு எதிராக மாற்றும். வியாபாரத்திற்கு சாதகமான நேரமிது. இந்த வாரம் புதிய வேலைகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். முதலீட்டு செய்வதற்கு நேரம் சரியில்லை. கொஞ்சம் கவனமாக இருங்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும், நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மன உளைச்சல்களை நீக்க முயற்சி செய்யுங்கள். தியானம் செய்வது அதிக பயனைத் தரும்.

விருச்சிகம்: உங்கள் புத்திசாலித்தனத்தால், உங்கள் குடும்ப வாழ்க்கையை அழகாக்குவதற்கான எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டீர்கள். அதிலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் போட்டி அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் கிடைக்கும். நீங்கள் காதலிப்பவருடன் நல்ல அன்யோன்யத்தைப் பெறுவீர்கள். இது உங்கள் உறவை பலப்படுத்தும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் பதவி உயர்வுக்கான நேரமிது.

இந்த நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தி, சிறந்த வேலையைச் செய்ய முயற்சி செய்யுங்கள். உங்களின் புத்திசாலித்தனமும், திறமையும் உங்களை முன்னோக்கி அழைத்துச் செல்லும். மாணவர்களுக்கு இந்த நேரம் நன்றாக உள்ளது. அவர்கள் தொழில்நுட்ப ஆய்வுகளில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம். இது தவிர, ஏதேனும் நுண்கலை பயின்று வருபவர்களும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தாயிடம் தனி அன்பைக் காண்பீர்கள். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்வில் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேலைக்குச் செல்வதில் வெற்றி பெறலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். படிப்பில் சிறப்பாகச் செயல்படுவார்கள்.

போட்டியிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கலாம். வேலையில் வேகத்தைத் தக்கவைக்க நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். இந்த நேரம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மகரம்: குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். பரஸ்பர கருத்து வேறுபாடுகள் விலகி, ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்பு உணர்வு அதிகரிக்கும். இதன் காரணமாக வீட்டில் மகிழ்ச்சி பெருகும். நிதி ரீதியாகவும் இந்த வாரம் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, இரண்டு இடங்களிலும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் புத்திசாலித்தனம் வளரும். உங்கள் மனமும் கூர்மையாக இருக்கும்.

இதன் காரணமாக உங்கள் வேலைகளில் வெற்றி கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கும் கூட சூழ்நிலை சாதகமாக இருக்கும். மாணவர்கள் இப்போது தங்கள் புத்திசாலித்தனத்தின் பலனைப் பெறுவார்கள். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். படிப்பில் உங்கள் முயற்சிகளின் வழி வித்தியாசமாக இருக்கும். இதன் காரணமாக நீங்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். உங்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெரிய பிரச்னைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

கும்பம்: தனிமை உணர்வில் இருந்து வெளியே வர வேண்டும். காதலிப்பவர்களுக்கு நேரம் சாதகமாக உள்ளது. மேலும், காதலிப்பவருடன் பல மணிநேரம் உரையாடுவீர்கள். அவர்களுடன் வாக்கிங், ஷாப்பிங் செல்வீர்கள். வார நடுப்பகுதியில் நண்பர்களைச் சந்திப்பீர்கள். இப்போது சில செலவுகள் அதிகரிக்கலாம். ஆனால் கவலைப்பட வேண்டாம்.

உங்கள் வருமானமும் அதே விகிதத்தில் அதிகரிக்கும். உங்கள் செலவுகள் உங்கள் மகிழ்ச்சிக்காக மட்டுமே என்பதால் நீங்கள் அனுபவித்து செலவு செய்வீர்கள். வியாபாரத்திற்கான நல்ல காலகட்டம் இது. உங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். இது சிறந்த பலனை தருவதோடு, உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

மீனம்: குடும்ப மோதல்களை சமாளிக்க வேண்டியிருக்கும். ஏனெனில், குடும்ப பிரச்னைகள் முன்னுக்கு வரும். குடும்பத்தினருடனான உங்களின் பேச்சுவார்த்தை அதிகரிக்கும். இதன் காரணமாக மக்கள், ஒருவருக்கொருவர் விலகிச் செல்லத் தொடங்குவார்கள். இந்த சூழ்நிலையைத் தவிர்க்க, நீங்கள் நிலைமையைக் சரிவர கையாள வேண்டும். அப்போதுதான் அது சாத்தியமாகும். இந்த நேரம் வாழ்க்கை துணைக்கும் சாதகமாக உள்ளது.

காதலிப்பவர்கள் நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்த நேரம் உங்களுடையது. இப்போது நீங்கள் காதலிப்பவரை திருமணம் செய்துகொள்ளும்படி முன்மொழியலாம். வேலை செய்பவர்கள் பணிக்கான அனுகூலத்தைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். படிப்பில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் இப்போது நன்றாக இருக்கும். கண்ட கண்ட உணவைச் சாப்பிடுவதால் தொண்டை வலி ஏற்படும். இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றது.

ABOUT THE AUTHOR

...view details