தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Weekly horoscope: இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக உள்ள ராசிகள் எது தெரியுமா? - கடகம்

ஜூலை 16 முதல் ஜூலை 22 வரையில் 12 ராசிகளுக்கான வார ராசிபலன்களைக் காணலாம்.

Weekly horoscope
Weekly horoscope

By

Published : Jul 16, 2023, 6:44 AM IST

மேஷம்: வாரத் தொடக்கத்தில் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களுடன் பழைய நினைவுகளைப் பேசிக்கொண்டு வாக்கிங் செல்லலாம். இதன் மூலம் மனம் புத்துணர்ச்சி பெற்று சந்தோஷமாக இருப்பீர்கள். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளைப் புறந்தள்ளிவிட்டு முன்னேற வேண்டும். காதலிப்பவர்கள் ரொமான்ஸுடன், சண்டைபோடவும் நேரிடும். இது இனிப்பும், புளிப்பும் கலந்ததாக இருக்கும். செய்யும் வேலையில் உங்கள் நிலைமைகள் மேம்படக்கூடும். ஆனால் நீங்கள் யாருடனும் சண்டையிடுவதைத் தவிர்க்க வேண்டும். எந்தப் பெண்ணையும் இழிவுபடுத்தும்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. இல்லையெனில், நீங்கள் சிக்கலில் சிக்க நேரிடும். வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். உங்கள் முயற்சிகள் பலனளிக்கும். சில புதிய நன்மைகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் முழு கடின உழைப்புடன் முன்னேற வேண்டும். இல்லையெனில் படிப்பில் சிக்கலைச் சந்திக்க நேரிடும்.

ரிஷபம்: இந்த வாரம் சாதகமான வாரமாக அமையவுள்ளது. திருமணமானவர்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும், அன்யோன்யமாகவும் இருப்பார்கள். புதிய சொத்து வாங்குவதில் வெற்றி உண்டாகும். காதலிப்பவர்கள் தங்கள் காதலியுடன் நெருக்கமாக இருக்கலாம் மற்றும் அவர்களுடன் நல்லுறவைப் பராமரிக்கலாம். ஒருவருக்கொருவர் நட்பாகப் பழகலாம். இது உங்கள் உறவை மேம்படுத்தக்கூடும். எந்தத் துறையில் வேலை செய்தாலும் அதில் மகத்தான வெற்றியைக் காண்பீர்கள். ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்தவர்கள் அதிக ஆதாயம் அடைவார்கள். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வேலையை முன்னெடுத்துச் செல்ல சில புதிய வழிகளை முயற்சி செய்யலாம். இது நல்ல லாபத்தைக் கொடுக்கும். புதிய அலுவலகத்தையும் உருவாக்கலாம். மாணவர்களுக்கு சாதகமானதாக இந்த வாரம் அமைகிறது. கடின உழைப்பு வெற்றி பெற்று படிப்பில் முன்னேறி மகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது நல்லது.

மிதுனம்:ஓரளவு நற்பலன்தரும் வாரமாக இருக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்வு வலுவாக இருக்கும். ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு உறவை வலுவடையச் செய்வீர்கள். மேலும் வீட்டுச் சூழலை இன்னும் சிறப்பாக மாற்றுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக நின்று முன்னேற்றத்தை ஊக்குவிப்பார். காதலிப்பவர்களுக்கு நல்ல வாரமிது. காதலிப்பவரை திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மன உளைச்சலை நீக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் அது வேலையை கெடுத்துவிடும். அதிர்ஷ்டம் மேலோங்கக்கூடும். இதன் காரணமாக அதிக முயற்சி இல்லாமல் வேலையில் வெற்றியைப் பெறுவீர்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். அனுபவம் மற்றும் செயல்திறனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். இது வேலையில் வெற்றி பெற உதவும். வியாபாரம் செய்பவர்களுக்கு சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். முன் அனுபவம் உள்ளவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். அவர்களின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கடகம்:நல்ல வாரமாக இருக்கும். தாம்பத்திய வாழ்க்கை அமைதியாக நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்ல புரிதல் இருக்கும். காதலிப்பவர்களுக்கு பலவீனமான நேரமிது. பரஸ்பர வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. திட்டங்களை யாரிடமும் சொல்லாதீர்கள். இல்லையெனில், யாராவது உங்கள் வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது. நிறைய செலவுகள் ஏற்படும். ஆனால் அந்த செலவுகள் வேலைக்காக என்பதால் அந்த செலவுகளில் திருப்தியடைவீர்கள். மனமும் மூளையும் மிக வேகமாக வேலை செய்யும். மற்றவர்களுக்கு கடினமாகத் தோன்றும் வேலையை உங்களால் செய்ய முடியும். இதன் மூலம் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். எல்லா வேலைகளும் சரியாக நடந்தால் மனதில் திருப்தி ஏற்படும்.

சிம்மம்:இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக அமைகிறது. புதிய சந்தோஷத்தைத் தரும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். உறவில் ஒற்றுமையாக, ஒருவருக்கொருவர் சமமான மதிப்பைக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். இதன் காரணமாக உறவு வலுவடையக்கூடும். காதலிப்பவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். உங்களுக்கும் நீங்கள் காதலிப்பவருக்கும் இடையில் பல தவறான புரிதல்கள் இருக்கலாம். அதை அழிக்க சிறிது காலம் ஆகலாம். எனவே பொறுமையாக நடந்து அவர்களுக்கு எல்லாவற்றையும் புரிய வையுங்கள். உங்கள் வருமானத்தில் அபரிமிதமான அதிகரிப்பு இருக்கலாம். இதன் காரணமாக மன மகிழ்ச்சியுடன் முகம் மலரக்கூடும். செலவுகளும் இப்போது குறையும். இதன் காரணமாக மிகப்பெரிய பதற்றம் நீங்கும். இறையருளால் காரியம் நிறைவேறும். வேலை செய்பவர்கள் கடினமாக உழைப்பார்கள். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். இந்த வாரம் வியாபாரத்திற்கு சாதகமானதாக இருக்கும்.

கன்னி:சற்று சவாலான வாரமாகவே இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் பதற்றத்தையும், அன்பையும் உணரலாம். அதனால் உங்கள் உறவு புளிப்பும், இனிப்பும் கலந்ததாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு சுமாரான வாரமிது. நீங்கள் காதலிப்பவரின் மீதான இதயப்பூர்வமான விருப்பத்தை நீங்கள் மதிக்க வேண்டும். பல பணிகளை சரியான நேரத்தில் முடிப்பது என்பது உங்களுக்கு கவலைக்குரிய விஷயமாக மாறக்கூடும். எனவே சற்று படபடப்பாக காணப்படுவீர்கள். மேலும் ஒரே நேரத்தில் பல பணிகளைக் கையாள்வதால் நிறைய ஆற்றலை செலவிட வேண்டியிருக்கும். அதை சரியான நேரத்தில் பாதுகாப்பது அவசியம். செலவுகளைக் கட்டுப்படுத்துவது முக்கியம். இல்லையெனில், நீங்கள் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். வேலை செய்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். அவர்களின் வேலையில் பற்றாக்குறை ஏற்படலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு நீண்ட நாட்களாக காத்திருந்த முக்கிய நபரின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்: மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையும். நீங்கள் ஒருவருக்கொருவர் முழு ஆதரவை வழங்குவீர்கள். காதலிப்பவர்களுக்கு இனிமையான வாரமிது. உங்கள் உறவில் அன்பும் இருக்கும். வாக்குவாதங்களும் இருக்கும். வேலைக்காக கடினமாக உழைக்க வேண்டும். வேலையில் கூட மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். இதன் காரணமாக உங்களைப் பற்றிய மற்றவரின் கருத்து நன்றாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கும். ஒரு பெரிய ஆளைச் சந்திக்க நேரிடும். அதன் மூலம் பல பொருளாதார நன்மைகளைக் காண்பீர்கள். நீங்களும் நன்மைகளைப் பெறலாம். மாணவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கலாம். ஆனால் நேரம் ஒதுக்கி படிப்பதன் மூலம் படிப்பில் முன்னேறலாம்.

விருச்சிகம்: வாரத் தொடக்கத்தில் மாமனார், மாமியாரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களின் வேலையைப் பற்றி கொஞ்சம் கவலைப்படலாம். இதன் காரணமாக, உங்களுக்குள் ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால் பிரச்சனை சுமூகமாக முடிவடையும். காதலிப்பவர்களுக்கு அவ்வளவாக சரியானதாக இல்லை. காதலிப்பவரைச் சந்திப்பதில் சில சிரமங்களைச் சந்திக்க நேரிடும். இதன் காரணமாக சற்று டென்ஷன் ஆகலாம். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் திட்டங்களைப் பற்றி சற்று அதிகமாக சிந்திக்க வேண்டியிருக்கும். இல்லையெனில், திட்டங்களில் தடை ஏற்படக்கூடும். அதே நேரத்தில் வேலை செய்பவர்களுக்கு இந்த நேரம் வலுவாக இருக்கிறது. எல்லா வேலைகளையும் உறுதியாகச் செய்வீர்கள் மற்றும் பணிகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். மேலதிகாரியும் உங்கள் திறமையால் ஈர்க்கப்படலாம். மாணவர்களுக்கு நல்ல நேரமிது. போட்டியில் வெற்றி பெறுவார்கள்.

தனுசு: பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை இயல்பானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அதிகமாக வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். காதலிப்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கிறது. ஆனால் உங்களுக்கென சில தனிப்பட்ட விஷயங்களும் இருக்கிறது என்பதை காதலிப்பவர் புரிந்து கொள்ள வேண்டும். அதிகப்படியான குறுக்கீடு சிக்கலில் ஆழ்த்தக்கூடும். உங்களை நீங்கள் நம்புங்கள். யாரையும் தவறாகப் பேசாதீர்கள். பரஸ்பர நல்லிணக்கம் நன்றாக இருந்தால், குடும்ப சூழலும் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். இதனால் தொழிலும் சிறப்பாக நடக்கும். வருமானம் நன்றாக இருக்கும். எங்கிருந்தோ பெரிய நன்மைகள் கிடைக்கப்பெறலாம். திடீர் ஆதாயங்களால் மிதப்பாக நடந்துகொள்ளக் கூடாது. வேலையில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். எனவே அதிக கவனத்துடன் வேலை செய்வது அவசியம். இப்போது செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வருமானமும் அதிகரிக்கும்.

மகரம்: ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு திருமணம் நடக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பச் சூழல் நன்றாக இருக்கும். இல்லற வாழ்க்கைக்கு சாதகமான நேரமிது. வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிதல் ஏற்படலாம். காதலிப்பவர்களுக்கும் நேரம் சாதகமாக இருக்கலாம். நெருக்கமான உறவுகள் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக கலவையான முடிவுகளைத் தரக்கூடும். ஒரு புறம் பணப்பிரச்சனைகள் ஏற்பட்டாலும், மறுபுறம் வருமானம் அதிகரிப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் நிதானம் ஏற்படலாம். நல்ல நிலையில் இருப்பீர்கள். இதன் காரணமாக நன்றாக வேலை செய்வீர்கள். இந்தக் காலகட்டம் வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமானதாக இருக்கும். எனவே அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தம் செய்து கொள்வீர்கள்.

கும்பம்:இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக அமைகிறது. திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கையும் சாதகமாகவே இருக்கும். உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் தரப்பிலிருந்து இருந்து வந்த கவலைகளும் நீங்கும். காதலிப்பவர்கள் தங்கள் மனக் கவலைகளைப் போக்க தாங்கள் காதலிப்பவருடன் உட்கார்ந்து பேச வேண்டும். இதனால் உங்கள் இருவர் மனமும் அமைதியடையும். உறவில் மகிழ்ச்சியைக் காணலாம். வேலை செய்பவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். வேலையை மாற்ற முடிவு செய்யலாம். வியாபாரத்தில் வெற்றி கிடைக்க வாய்ப்புகள் உண்டு. மாணவர்களுக்கு நல்ல நேரமிது. நல்ல பலனை பெற்று வெற்றி பெறுவார்கள். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

மீனம்:இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக அமைகிறது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை இந்த நேரத்தில் மிகவும் வலுவாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் நிறைய கிடைக்கும். அன்புக்குரியவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க அவர்களுக்கு ஒரு நல்ல பரிசைக் கொடுக்கலாம். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். எல்லோருடனும் சேர்ந்து பேசி மகிழ்வீர்கள். நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பரஸ்பர உறவுகள் வலுப்பெறும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். வாரத் தொடக்கத்தில், நிதி நிலைமையை மேம்படுத்துவதிலும் பணம் சம்பாதிப்பதிலுமே முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். இச்சமயத்தில் வங்கி இருப்பும் அதிகரிக்கக்கூடும். வேலை செய்பவர்களுக்கு வேலையில் வெற்றி கிடைக்கும். எதிரிகளிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தொழில்புரிபவர்கள் தங்கள் தொழிலில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வரி கட்டாமல் ஏமாற்றும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details