தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Weekly Horoscope: மே 5 வது வாரத்திற்கான ராசி பலன்! - astrology

WEEKLY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான மே 30 முதல் ஜூன் 5 ஆம் தேதி வரையிலான வார ராசிபலன்களை காண்போம்.

Weekly Horoscope: மே 5 வது வாரத்திற்கான ராசி பலன்!
Weekly Horoscope: மே 5 வது வாரத்திற்கான ராசி பலன்!

By

Published : May 30, 2022, 7:29 AM IST

மேஷம் :இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாகும். உங்கள் மனநிலையும் நன்றாக இருக்கும், மற்றவர்களையும் மகிழ்ச்சியுடன் இருக்க வைப்பீர்கள். மக்கள் உங்கள் பக்கம் ஈர்க்கப்படுவார்கள், உங்கள் ஆற்றலும் திறமையும் அவர்களை வசீகரிக்கக்கூடும். வருமானம் உயரலாம். சில செலவுகள் தொடரலாம், ஆனால் உங்கள் கவலைகள் குறைந்துவிடும்.

வேலையில் இருப்பவர்களுக்கு, இந்த வாரம் சாதகமாகவே இருக்கும். எனவே, நீங்கள் உங்கள் வேலையை அனுபவித்து செய்வீர்கள். தொழில் புரிபவர்களை பொறுத்தவரை, இந்த வாரம் புதிய சாதனைகளை செய்யக்கூடிய காலகட்டமாகும். நீங்கள் சில நல்ல செய்திகளை பெறுவீர்கள். இந்த வாரம், நீங்கள் ஆடைகளோ அல்லது ஒரு தொலைபேசியோ அல்லது மடிக்கணினியோ வாங்கலாம்.

திருமணமான தம்பதிகளுக்கு அழகான தாம்பத்திய வாழ்க்கை வாழும் காலமிது, உங்கள் உறவு காதல் நிறைந்ததாக இருக்கும். அவர்களிடம் எதையும் சுதந்திரமாக எடுத்துரைப்பீர்கள், அதை அவர்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் வழக்கம் போல் இருக்கும். வார நடுப்பகுதி பயணத்திற்கு சிறந்தது.

ரிஷபம் :இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாகும். உங்களது வருமானமும் பொறுப்பும் அதிகரிக்கும். உங்கள் தடைகளை வாழ்க்கைத்துணையுடன் சேர்ந்து சமாளிப்பதன் மூலம் முன்னேற்றத்தை அடைவீர்கள். இது உங்களின் வெற்றிக்கு அடையாளமாகும். நீங்கள் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் அடைய முடியும்.

நீங்கள் வேலை செய்பவராக இருந்தால், உங்கள் வேலையை அனுபவித்து செய்வீர்கள், உங்கள் வேலையை நேர்மையுடனும் திறமையுடனும் முழுமையாக நிறைவேற்றுவீர்கள், இதனால் உங்கள் வேலை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே சிறந்த முறையில் செய்து முடிக்கப்படும். நீங்கள் தொழில் புரிபவராக இருந்தால், இலாபம் ஈட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை நீங்களே கண்கூடாக காண்பீர்கள்.

உங்கள் திட்டங்கள் வெற்றியடையும். பணத்தை முதலீடு செய்வது சாதகமான வருவாயைத் தரும், மேலும் நிறுவனத்தில் இலாபங்கள் உயரும். உங்கள் உடல்நிலையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படலாம். நீங்கள் உடல்நிலையில் ஒரு சில சிறிய பிரச்சினைகளைக் கொண்டிருக்கலாம். திருமணமான தம்பதிகளின் வாழ்க்கை சீராக இருக்கும். உங்கள் உறவில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க மூன்றாம் தரப்பினரின் உதவி உங்களுக்குத் தேவையில்லை.

என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை உட்கார்ந்து உங்கள் உள்மனதைக் கேளுங்கள். நீங்கள் காதலிப்பவராக இருந்தால், இந்த வாரம் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களுக்கு கூட்டாண்மை உணர்வு இருக்கலாம். சில வேறுபாடுகளும் இருக்கலாம். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது. மேலும், மாணவர்கள் தங்கள் படிப்பை அனுபவித்து படிப்பார்கள்.

மிதுனம் :இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் வாரமாகும். வாரத் தொடக்கத்தில் இருந்து, உங்கள் வருமானம் வானம் தொடும் அளவுக்கு உயரக்கூடும். சில சிறிய செலவுகள் இருக்கும், ஆனால் அவற்றை ஈடுசெய்ய உங்கள் வருவாய் போதுமானதாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் குறையலாம். நீங்கள் நோய்வாய்ப்படலாம், எனவே உங்கள் உணவில், ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துங்கள்.

வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை விரும்பிச் செய்வார்கள். நீங்கள் பதவி உயர்வுக்கு தகுதியுடையவராக இருப்பீர்கள். இந்த வாரம் தொழில் அதிபர்களுக்கும் நல்லது நடக்கும். நீங்கள் தொலைதூர இடங்களிலிருந்தே உங்கள் தொழிலை மேம்படுத்த முடியும், இது உங்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யும்.

திருமணமான தம்பதிகளுக்கு ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை வாழ்வதற்கான நேரமாக இருக்கும், மேலும் உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் சொந்த வேலையில் உங்களுக்கு உதவியாக இருப்பார். காதலிப்பவர்களுக்கு நல்ல நேரமிது, சிலருக்கு காதலில் விழும் வாய்ப்புகளும் உள்ளது, இது அவர்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யும்.

கடகம் :இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். இந்த வாரத் தொடக்கத்தில் உங்கள் சொந்த வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் இடையேயான சமநிலையை கையாள முயற்சிப்பீர்கள், இதை பெரிய அளவில் சமாளித்து வெற்றி காண்பீர்கள். உங்களின் தந்தைக்கு நோய் ஏற்படலாம். அவர் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை அனுபவித்து மகிழ்வார்கள்.

அவர்கள் தங்கள் பணிகளை விரைவாகவே முடித்துவிடுவார்கள், இதனால் அவர்களுக்கு நேரம் மிச்சமாகும். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த நேரத்தைச் செலவிடுவார்கள். வேலை தொடர்பாக சில நல்ல விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம், இது உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கக்கூடும். இந்த வாரம் தொழில் புரிபவர்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் வியாபாரம் வேகமாக வளரக்கூடும், உங்கள் வருமானமும் அதிகரிக்கக்கூடும்.

திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். காதலிப்பவர்களுக்கும் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் உறவை அழகாக முன்னேற்றுவீர்கள். நீங்கள் காதலிப்பவருடன் எங்காவது நடைபயணமாக செல்லலாம். மாணவர்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். வார நடுப்பகுதி பயணத்திற்கு நன்றாக இருக்கும்.

சிம்மம் :இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் வேலையை நீங்கள் அனுபவித்து செய்வீர்கள், இது உங்கள் மரியாதையை வலுப்படுத்தும். உங்கள் முதலாளியும் உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார். இந்த வாரம் தொழில் புரிபவர்கள் தங்கள் எதிர்பார்ப்பை விட சிறந்த லாபத்தை அடைவார்கள். உங்கள் வேலை மெதுவாக அதிகரிக்கலாம், ஆனால் நிச்சயமாக நீங்கள் தொழிலில் முன்னோக்கிச் செல்வீர்கள்.

காதலிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக இது இருக்கும். திருமணமானவர்களுக்கு, தங்கள் குடும்ப வாழ்க்கை முன்பை விட இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், மேலும் அவர்கள் குடும்ப பொறுப்புகளை புரிந்துகொண்டு இணக்கமாக வேலை செய்வார்கள்.

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், இது பல்வேறு வழிகளில் உங்களுக்கு உதவும். மாணவர்கள் தங்கள் படிப்பில் பயனடையலாம், ஆனால் உங்கள் படிப்பைத் தடுக்கக்கூடிய சிலரும் உங்களுடன் இருக்கலாம். அவர்களிடமிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

கன்னி :வாரத் தொடக்கத்தில் இருந்தே, சில நல்ல செய்திகள் உங்கள் காதில் கேட்கத்தொடங்கும். தொலைதூரப் பகுதிகளிலிருந்து சாதகமான செய்திகளைப் பெறுவீர்கள், இது உங்கள் தொழிலை ஊக்குவிக்கும். உங்கள் வருமானமும் இலாபமும் உயரக்கூடும், மேலும் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

வேலை செய்பவர்கள் தங்கள் வேலைகளில் நல்ல பலன்களை அடைவார்கள். சம்பள உயர்வும் கிடைக்கும். நீங்கள் எந்த வேலையையும் செய்யாமல் விட்டு வைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை ஒருவித பதட்டத்துடனேயே இருக்கும், ஆனால் நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும் பரஸ்பரமாக புரிந்துகொண்டு செயல்படுவீர்கள், இது உங்கள் உறவை நல்லவிதமாக மாற்றும்.

காதலிப்பவர்களுக்கு நல்ல வாரமிது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வார்கள், ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள். மாணவர்கள் நன்கு படிப்பார்கள். இந்த வாரம் முழுவதும் பயணத்திற்கு ஏற்றதே.

துலாம் :இந்த வாரம் உங்களுக்கு பயனுள்ள வாரமாக இருக்கும், ஆனால் வாரத் தொடக்கத்தில் எந்தவொரு முக்கிய திட்டங்களையும் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் நீங்கள் பணத்தை இழக்க நேரிடலாம். இந்த வாரம் பணத்தை முதலீடு செய்வதென்பது நல்ல முடிவு அல்ல. எனவே முதலீடு செய்வதைத் தவிர்த்திடுங்கள்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் வழக்கத்தைப் போலவே இருக்கும். வேலை செய்யுமிடத்தில் போராட வேண்டியிருக்கும், அதே நேரத்தில் தொழில் புரிபவர்கள் செழிப்பாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம், எனவே கவனமாக இருங்கள். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், குடிக்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் திருமண வாழ்க்கை மிகவும் அன்யோன்யமாக இருக்கும். நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் ஈர்க்கும் விதத்திலும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டும் செயல்படுவீர்கள்.

இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு சாதாரணமாகவே இருக்கும், ஆனால் உங்கள் உணர்வுகளுக்கு உண்மையாக இருப்பீர்கள், உங்கள் அன்பு சக்தி வாய்ந்ததாக இருக்கும். நீங்கள் காதலிப்பவரை மகிழ்விக்க எல்லா முயற்சிகளையும் செய்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் சவால்கள் இருந்தாலும் ஒழுங்காக படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். வாரத் தொடக்கத்தைத் தவிர மற்ற நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

விருச்சிகம் :இந்த வாரம் உங்களுக்கு பயனுள்ள வாரமாக இருக்கும். இந்த வாரத் தொடக்கத்தில் உங்கள் தொழில் விரிவடையும். நீங்கள் உற்சாகத்துடன் வேலையை நிறைவேற்றுவீர்கள், இதன் விளைவாக உங்களுக்கு சாதகமான முடிவுகளும் ஊதிய உயர்வும் கிடைக்கும். உங்கள் லாபமும் அதிகரிக்கும், உங்கள் தனிப்பட்ட உறவுகளை மேம்படுத்துவது வேலையில் நேர்மறையான விளைவுகளைத் தரும்.

வேலை செய்பவர்களுக்கும் இந்த வாரம் நன்மை தரும் வாரமாகவே அமையும். உங்கள் முயற்சிகள் யாவும் அங்கீகரிக்கப்படும். உங்கள் உடல்நிலையும் மனநிலையும் சிறப்பாக இருக்கும். இந்த வாரம் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ற வாரமாகும். காதலிப்பவர்கள் கூட காதல் நிறைந்த தருணங்களை எதிர்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வார்கள். வாழ்ந்தாலும் உன்னுடன் செத்தாலும் உன்னுடன் என்று காதல் சபதம் எடுப்பார்கள்.

திருமணமான தம்பதிகளின் வாழ்க்கை வசதியாக இருக்கும். உங்கள் பிணைப்பு புரிதல் உணர்வைக் கொண்டிருக்கும், மேலும் உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் பிரச்சனைகளையும் மகிழ்ச்சியையும் பற்றி அறிந்து அதற்கேற்ப செயல்படுவார், அதை நீங்கள் பாராட்டுவீர்கள். மாணவர்களுக்கு நல்ல வாரமிது. அவர்கள் படிப்பதை சுவாரஸ்யமாக எடுத்துக்கொண்டு நன்கு படிப்பார்கள். இது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். வாரக் கடைசியில் இரண்டு நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

தனுசு :இந்த வாரம் உங்களுக்கு மிதமான பலன் தரக்கூடிய வாரமாக இருக்கும். இந்த வாரம் எந்த பெரிய வேலையையும் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள், தேவையற்ற கவலைகளிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள், இல்லையெனில் மனக் கவலைகள் அதிகரித்து நோய்வாய்ப்படலாம். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை ஒருவித பதட்டத்துடன் இருக்கலாம்.

அவற்றைத் தவிர்க்க, நீங்கள் அமைதியாக இருந்தாலே போதும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நல்ல வாரமாகும். உங்கள் உறவில் காதல் அதிகரிக்கலாம். இந்த வாரம் தொழில் புரிபவர்களுக்கு சாதாரணமான வாரமாகவே இருக்கும்.

நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் இப்போது செய்யலாம்; உங்கள் பணத்தை ஏமாற்றியவர்களிடமிருந்து பணத்தைக் கேட்க விரும்பினால், இப்போது கேட்கலாம். வேலை செய்பவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கிறது. நீங்கள் கடினமாக உழைத்து உங்கள் செயல்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவீர்கள். வாரக் கடைசி நாள் பயணத்திற்கு ஏற்றது.

மகரம் :இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். நீங்கள் காதலிப்பவர் இதயப்பூர்வமாக உங்களுடன் இணைவதால், உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் நிறைய மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். நீங்கள் இருவரும் உங்கள் இதயங்களில் உங்கள் அன்பின் ஆழத்தை உணரலாம், இது உங்கள் காதல் வாழ்க்கையை அற்புதமாக மாற்றும், ஆனால் உங்கள் உறவுக்குள் யாரையும் தலையிட அனுமதிக்காதீர்கள்.

இல்லையெனில், நிலைமை மோசமடையக்கூடும். திருமணமானவர்கள் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுவார்கள். நீங்கள் குறிப்பிடத்தக்க ஒன்றை சாதிப்பீர்கள், அதன் விளைவாக உங்கள் வாழ்க்கைத் துணை மிகவும் மகிழ்ச்சியடைவார். இது உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் நன்மை பயக்கும். வியாபாரத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.

நீங்கள் பெரிய அளவிலான லாபத்தை அடைவீர்கள். கடினமாக உழைக்க நீங்கள் ஊக்குவிக்கப்படுவீர்கள் மற்றும் வேலையில் ஆர்வமாக இருக்கலாம். வேலை பார்ப்பவர்களுக்கு, இந்த வாரம் வழக்கம் போல் இருக்கும், ஆனால் நீங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். மாணவர்கள் ஒரு வலுவான கல்வி நிலையை அடைய முடியும், மேலும் அவர்கள் கடினமாக உழைத்தால் அவர்கள் படிப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வார்கள். வாரத்தில் முதல் நாள் பயணத்திற்கு ஏற்றது.

கும்பம் :இந்த வாரம் நீங்கள் மகிழ்ச்சியான செய்தியைப் பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தின் நிலை மேம்படும். நீங்கள் விரும்புவதை அடைய முடியும், அதை நீங்கள் நிறைவேற்றவும் முடியும். மேலும் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். பயணம் செய்ய நேரம் எடுக்கும்.

அண்டை வீட்டாருடன் உறவுகள் மேம்படும், நீங்கள் ஒருவரை விரும்பலாம். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நல்லது. இதயத்திலிருந்து பேசுவது எளிமையாக இருக்கும். திருமணமான தம்பதிகள் ஒரு நல்ல வீட்டு வாழ்க்கையை வாழ்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறையலாம், எனவே கவனமாக இருங்க வேண்டும்.

இந்த வாரம் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் தொழில்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடியும். மாணவர்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். அவர்களின் முயற்சிகள் பலனளிக்கும் வகையில் அமையும். நீங்கள் பயணம் செய்ய இந்த வாரம் சிறந்தது.

மீனம் :இந்த வாரம் உங்களுக்கு மிதமான பலனை தரும். வாரத் தொடக்கத்தில், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கூடும். வருமானம் அதிகரிக்கும். செலவுகள் குறையலாம், இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்ப சூழ்நிலையும் சாதகமானதாக இருக்கும்.

சம்பளம் பெறுபவர்கள் தங்கள் வேலையில் வலிமையைக் காணலாம், மேலும் உங்கள் மூத்தவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் ஆக்ரோஷமாக இருப்பார்கள் மற்றும் தங்கள் வியாபார உத்தியை முன்னெடுத்துச் செல்வார்கள். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஆனால் உங்கள் கோபத்தின் காரணமாக, நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேரடியாக பேசலாம்.

இது உறவை மேலும் பதட்டமடையச் செய்யலாம். காதலிப்பவர்களுக்கு ஒரு அற்புதமான வாரமாக இருக்கும். நீங்கள் அவரை அல்லது அவளை பற்றி உங்கள் அன்புக்குரியவர்களிடம் சொல்ல முடியும். படிப்பதற்கு இது ஒரு சிறந்த வாரம். உங்கள் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். வாரத்தின் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

இதையும் படிங்க:New Year 2022 Horoscope: அடுத்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

ABOUT THE AUTHOR

...view details