மேஷம் :உங்களின் திருமண வாழ்க்கை காதல் நிறைந்ததாக இருக்கும். உங்கள் உறவுகளில் அன்பும் அக்கறையும் நிறைந்திருக்கும். கடினமான சூழ்நிலைகளில் வெற்றிபெற உங்கள் திறமையும் புத்திசாலித்தனமும் உங்களுக்கு உதவும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பணியில் சில ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். இருப்பினும், தொழில்நுட்பம் தொடர்பான பணிகளுக்கு இந்த வாரம் சிறப்பானதாகவே இருக்கும்.
வியாபாரம் செய்பவர்களுக்கு நன்மைகள் கூடும். செலவுகள் நிலையானதாக இருக்கும். சட்டப் பணிகளில் ஈடுபடும்போது பொறுமையாக இருப்பது நல்லது. பெரிய முடிவுகளை எடுக்க தகுந்த நேரம் இதுவல்ல. மாணவர்கள் படிப்பதற்கென அதிக நேரத்தை செலவிடுவார்கள், அவர்களின் கவனம் முழுவதும் படிப்பில் தான் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். வார இறுதி நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கலாம்.
ரிஷபம் :இந்த வாரம் ரிஷப ராசியினருக்கு சிறந்த பலன்களையே கொடுக்கும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பார்கள். உங்கள் வாழ்க்கைத்துணை எல்லா வகையிலும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். உங்கள் உறவை மேலும் மேம்படுத்த இதுவே சிறந்த தருணம். உங்கள் இருவருக்கும் இடையிலான புரிதல் வலுப்பெரும்.
புதிதாகவும் தனித்துவமாகவும் ஏதாவது செய்யவேண்டுமென்ற ஆசை உங்களுக்குள்ளே இருக்கலாம். செய்யும் வேலையில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். இருப்பினும், புத்திசாலித்தனமாக செய்வதாக நினைத்து எதையும் தவறாக செய்துவிடாதீர்கள். உயரதிகாரிகள் உங்களுடன் நன்கு பழகுவார்கள், உங்களுக்கு எப்போதும் உதவிகரமாக இருப்பார்கள்.
வருமானம் எப்போதும் போல நன்றாக இருக்கும். நீங்கள் தொழில்புரிபவர்களாக இருந்தால், உங்கள் தொழிலுக்கென புதிய மிஷின்களை வாங்குவீர்கள். மாணவர்கள் படிப்பை அனுபவித்து படிப்பார்கள். இந்த வாரம் உடல்நிலையில் எந்த பெரிய பிரச்சனையும் ஏற்படாது, ஆனால் நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். வார இறுதிநாட்கள் பயணத்திற்கு ஏற்றது.
மிதுனம் :திருமணமானவர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும், அதே போல் திருமணமாகப் போகும் ஜோடிகளும் தங்கள் உறவின் அடுத்த நிலையை எண்ணி மகிழ்ச்சியடைவார்கள். மாத ஊதியத்திற்கு பணிபுரிவோர்கள் தங்கள் பணியை அனுபவித்து செய்வார்கள், ஆனால் உங்களின் போட்டியாளர்களிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் தொழில்புரிபவர்களுக்கு நன்றாகவே இருக்கும், சிறந்த முடிவுகளும் நல்ல வருமானமும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வி கற்பதில் வெற்றிகிட்டும். அவர்களுக்கு பாடத்திட்டங்களின் மீதான பற்றுதல் அதிகரிக்கும். இந்த வாரம் உடல்நிலையைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும், பருவநிலை மாற்றம் ஏற்படும்போது கவனமாக இருக்க வேண்டும். இந்த வார தொடக்க நாட்களும் இறுதி நாட்களும் பயணத்திற்கு ஏற்றது.
கடகம் :கடக ராசியினர் எப்போதும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் இடையிலான சமநிலையைப் பராமரிப்பதில் வெற்றியடைவார்கள். இருந்தாலும், திருமணமானவர்களுக்கு சில தகராறுகளும் மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் உங்களின் வாழ்க்கைத்துணையின் உடல்நிலையும் பாதிக்கப்படலாம்.
உங்கள் திருமண உறவில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். உங்களின் திறன் மேம்படும். உங்கள் வேலையை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். மாத சம்பளம் வாங்குவோர் தங்கள் வேலையைச் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடிப்பார்கள். நீங்கள் கூடுதல் சிரத்தையெடுத்து செயல்படுவீர்கள், எனவே குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பீர்கள்.
உயரதிகாரிகள் உங்களைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள். உங்கள் தொழிலை விரிவுபடுத்தவும் வளர்ச்சியடையச் செய்யவும் இது சிறந்த நேரமாகும். உங்கள் உத்திகள் அனைத்தும் வெற்றியில் முடியும். மாணவர்களுக்கும் சிறப்பான வாரமிது. உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
சிம்மம் :இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். திருமணமானவர்கள் காதல் நிறைந்த இணக்கமான உறவைக் கொண்டிருப்பார்கள். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் பயணம் செல்வீர்கள். காதல் உறவில் இருப்பவர்களுக்கும் நல்ல நேரமிது. உங்கள் மனம் வேகமாகத் துடிப்பதாக நீங்கள் உணரலாம், அதை நன்றாகப் பயன்படுத்த இது ஒரு நல்ல நேரம். அதிர்ஷ்டமும் உங்கள் பக்கம் தான் இருக்கிறது.
சிலர் உங்களைத் தொந்தரவு செய்ய நினைக்கலாம், எனவே கவனமுடன் இருக்க வேண்டும். உங்கள் இரகசியங்களை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் மாணவர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். உடல்நிலை சராசரியாக இருக்கும். காரமான உணவையும் ஃப்ரைடு செய்த உணவையும் தவிர்ப்பது நல்லது. வார தொடக்க நாட்களும் இடைப்பட்ட நாட்களும் பயணத்திற்கு ஏற்றது.
கன்னி :இந்த வாரம் கன்னி ராசியினரின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தேவையற்ற சண்டை சச்சரவுகளில் தலையிடுவதைத் தவிர்க்கவும். இந்த வாரம் காதலிப்பவர்கள் தங்களுக்குள்ளேயே தங்கள் காதலை சுயபரிசோதனை செய்து கொள்வார்கள். உங்களின் இலக்குகள் யாவும் வெற்றிபெரும், அது உங்களின் மன உறுதியை அதிகரிக்கும்.
உங்கள் தொழிலை முன்னோக்கி எடுத்துச் செல்வீர்கள், சில முக்கியமான தேவையான முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் லாபம் அதிகரிக்கும். சில செலவுகள் ஏற்படும் ஆனால், அது உங்கள் நிதி நிலையை பாதிக்காது. மாத வருமானம் பெரும் ஊழியர்கள் நன்கு பணிபுரிவார்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறு சிறு தடைகளை எதிர் கொள்வார்கள்.
இந்த வாரம் உங்கள் உடல்நிலை வழக்கத்தைவிட சற்று சீராகவே இருக்கும். மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், அதிலிருந்து விரைவாக மீண்டு வருவீர்கள். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும். நீங்கள் பயணத்திற்கு திட்டமிடலாம்.
துலாம் :துலாம் ராசியினருக்கு இந்த வாரம் நன்றாகவே இருக்கும். நல்ல பலன்களையே தரும். திருமணமான தம்பதி தங்கள் இல்லத்திலேயே இனிமையான தருணங்களை அனுபவிப்பார்கள். காதலிப்பவர்கள் தாங்கள் காதலிப்பவரை சந்தோசப்படுத்தி பார்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். வாரத் தொடக்கத்தில் வேலையை முடிக்க சிரத்தை மேற்கொள்வீர்கள்.