ஹைதராபாத் : ஆங்கிலேய காலனியாதிக்கம் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என பரவியிருந்தது. ஆங்கிலேயர்களின் கொடுமைகள், அடக்குமுறைகளுக்கு எதிராக நாடு முழுக்க பல்வேறு கிளர்ச்சிகள், போராட்டங்கள் பொதுவானவையாக இருந்தன.
இருப்பினும் ஜார்க்கண்ட் பழங்குடியினரின் சுதந்திர புரட்சியை ஆங்கிலேயர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. ஆங்கிலேயர் வசம் பீரங்கி, துப்பாக்கி குண்டுகள் இருந்தாலும், ஜார்க்கண்ட் பழங்குடியினரை எதிர்கொள்ள நடுங்கினர்.
ஜார்க்கண்ட் பழங்குடியினர்
ஏனெனில் ஜார்க்கண்ட் பழங்குடியினர் அம்பு மற்றும் வில் போன்ற பாரம்பரிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் நிபுணர்களாக இருந்தனர். இவர்கள் கொரில்லா போரிலும் நிபுணத்துவம் பெற்றிருந்ததால் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இது மட்டுமின்றி பழங்குடியினர் கிளர்ச்சி அக்கால கிளர்ச்சிகளில் வேறுபட்டது. ஜார்க்கண்டின் புவியியல் சூழலும் பழங்குடியினரை வெல்வது ஆங்கிலேயர்களுக்கு கடினமாக இருந்தது. இது குறித்து வரலாற்று ஆசிரியர் கமல் மகாவர் கூறுகையில், “ஆங்கிலேய காலனியாதிக்கத்துக்கு எதிரான சுதந்திர போரில் பழங்குடியினரின் பங்கு முக்கியமானது.
வில், அம்பு ஆயுதங்கள்
குறிப்பாக ஜார்க்கண்ட் பழங்குடியினர் தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்கள் வில், அம்பு, கம்பு, குச்சி உள்ளிட்ட ஆயுதங்களை பிரயோகப்படுத்தினர். கொரில்லா போர் முறையும் அவர்களுக்கு அத்துபடி” என்றார்.
பொதுவாக பழங்குடியினர் தங்களது ஆயுதங்களை விஸ்வாசத்தின் அங்கமாக பார்க்கின்றனர். அவர்கள் பயன்படுத்தும் வில், அம்பு சிறப்பு அங்கீகாரத்தை கொடுக்கும் என நம்புகின்றனர்.
உயிரைக் கொல்லும் விஷப் பூச்சு
மேலும் சிறு வயதில் இருந்தே பழங்குடியினர் வில், அம்பு ஈட்டி, குச்சிகள், உரோமங்கள் மற்றும் பல பாரம்பரிய ஆயுதங்களைப் தற்பாதுகாப்புக்காக பயன்படுத்துகின்றனர். சிறு வயதிலிருந்தே இதில் ஈடுபடுவதால் யுத்தக் கலைகளிலும் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.
75ஆவது சுதந்திர தினம்; ஜார்க்கண்ட் பழங்குடியினர் கிளர்ச்சி! தங்கள் ஆயுதங்களை கொடியதாக மாற்ற, பழங்குடியினர் அம்புகளில் ஒரு சிறப்பு பூச்சு பூசுவார்கள். கலவையான சிறப்பு மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் இது எதிரியின் உயிரைக் கொல்லும் அளவுக்கு ஆபத்தானது.
கொரில்லா தாக்குதல்
சில பூச்சுகள் எதிரிகளின் வேதனையை நீட்டிக்கும், உடனடியாக கொல்லாது. பழங்குடியினர் பல்வேறு வகையான போர் யுக்திகளை பின்பற்றுவார்கள். அவர்கள் காடுகளில் ஒளிந்து தங்கள் எதிரிகளுக்காக காத்திருப்பார்கள்.
எதிரிகளைப் பற்றிய துப்பு கிடைத்தவுடன், நாலாபுறமும் இருந்து தாக்குவார்கள். இந்தத் தாக்குதலின்போது, பழங்குடியினரும் காயமடைவார்கள். அவ்வாறு காயமுற்றால் காட்டில் உள்ள மூலிகைகளை சிகிச்சைக்காக பயன்படுத்திக்கொள்வார்கள்.
பிர்சா முண்டா வரை..
பாரம்பரிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பழங்குடியினர் கைதேர்ந்தவர்கள். இதன் பின்னணியில் இரும்பு மற்றும் மூங்கில் களைகள் உள்ளன. ஜப்ரா பஹாரியா, சிடோ-கன்ஹோ மற்றும் நிலம்பர்-பிடம்பர் முதல் பிர்சா முண்டா வரை, நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களின் இன்னுயிரையும் பொருட்படுத்தாது பாடுபட்டவர்கள்.
இவர்கள் பாரம்பரிய ஆயுதங்களை பயன்படுத்துவதில் கைதேர்ந்த நிபுணர்களாக இருந்தனர். நீர், மலை, காட்டை பழங்குடியினர் கடவுளாக கருதுவதால் இது சுதந்திர போராட்டம் மட்டுமல்ல, அவர்களின் நம்பிக்கைக்குரிய போராட்டமும் கூட.
இதையும் படிங்க :கர்நாடகா ஜாலியன் வாலாபாக்!