கொல்கத்தா(மேற்கு வங்கம்):மேற்கு வங்க மாநிலத்தில், கொல்கத்தா நகரில் உள்ள தப்பன் சின்ஹா நினைவு மருத்துவமனையில் கரோனாவினால் சிகிச்சைப் பெற்று வந்த 95 வயதுடைய பாட்டி பூரண குணமடைந்தார்.
கடந்த மே 15ஆம் தேதி கரோனா தொற்றுக்கு ஆளான நந்தா ராணி ஆச்சர்யா என்னும் மூதாட்டி, மூச்சுத்திணறல் காரணமாக மே 19ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர் சிகிச்சை
இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர், மருத்துவ அலுவலர்கள் சுழற்சி முறையில் மூதாட்டிக்கு மருத்துவ சிகிச்சையையும் ஆக்ஸிஜன் தெரப்பியையும் அளித்து வந்தனர்.
விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றி
இந்நிலையில் அனைவரும் ஆச்சர்யம் அடையும் வகையில், 25 நாட்கள் கழித்து மூதாட்டி நந்தா ராணி முற்றிலுமாக கரோனாவில் இருந்து குணமடைந்தார்.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை செயற்கை சுவாசம் இல்லாமல் சுவாசிக்கும் அளவிற்கு நந்தா ராணி பாட்டி தயாரான நிலையில், மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து மூதாட்டி நந்தா ராணி ஆச்சார்யாவின் குடும்பத்தினர் மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு நெகிழ்ச்சியுற நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஐசியூ வார்டில் 'ஹேப்பி பர்த் டே': 93 வயது கரோனா நோயாளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மருத்துவர்கள்