தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘பில்லா’ படம் பார்த்த ஆந்திர ரசிகர்கள் அத்துமீறல்... தீ பிடித்த திரையரங்கம்... - Billa krishnam raju

மறைந்த முண்ணனி நடிகர் பிரபாஸின் பில்லா படத்தைப் பார்த்த ஆந்திர ரசிகர்களின் கொண்டாட்டத்தின் இடையே சில ரசிகர்களால் திரையரங்கத்தில் தீ பற்றியது.

‘பில்லா’ படம் பார்த்த ஆந்திர ரசிகர்களால் தீ பற்றிய திரையரங்கம்..
‘பில்லா’ படம் பார்த்த ஆந்திர ரசிகர்களால் தீ பற்றிய திரையரங்கம்..

By

Published : Oct 24, 2022, 11:09 AM IST

Updated : Oct 24, 2022, 11:31 AM IST

டோலிவுட் சினிமாவின் முண்ணனி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ், நேற்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக, டோலிவுட் மூத்த நடிகரும் பிரபாஸின் மாமாவுமான கிருஷ்ணம் ராஜு காலமானார். எனவே பிரபாஸ் இந்த ஆண்டு பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடவில்லை.

இருப்பினும், ஆந்திரப் பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தாடேபள்ளிகுடம் நகரில் சிறப்புக் காட்சியாக ‘பில்லா’ திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டது. 2009ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் கிருஷ்ணம் ராஜூ, பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

வெங்கட்ரமணா திரையரங்கில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்த பிரபாஸ் ரசிகர்களும் வந்தனர். இந்த நிலையில் ரசிகர்கள் திரையரங்கின் உள்ளேயே பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் எதிர்பாராத விதமாக திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

தொடர்ந்து அடுத்தடுத்து இருக்கைகள் தீப் பற்றி எரியத் தொடங்கியது. எனவே உடனடியாக திரையரங்க ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் சிலர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:பிறந்த நாளில் ரசிகர்களுக்கு ‘புராஜெக்ட் கே’ பட போஸ்டரை பரிசளித்த பிரபாஸ்

Last Updated : Oct 24, 2022, 11:31 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details