டெல்லி: இந்த நாட்டை நால்வர் வழிநடத்துகின்றனர் என்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அனுராக் தாகூர் பதிலளித்தார்.
மக்களவையில் இன்று பேசிய ராகுல் காந்தி, “மத்திய அரசின் முதல் விவசாய சட்டம் விவசாய சந்தைகளை ஒழித்து கட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இரண்டாவது சட்டம் பதுக்கலுக்கு வழிசெய்யும், மூன்றாவது சட்டம் விவசாயிகள் பெருநிறுவன முதலாளிகளிடம் குறைந்தப்பட்ச ஆதார விலைக்க கையேந்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும், இந்த அரசு 'ஹம் டூ ஹமரே டூ', அதாவது நாம் இருவர் நமக்கு இருவர் என்ற பாணியில் பெருநிறுவன முதலாளிகளுக்காக செயல்படுகிறது என்று குற்றஞ்சாட்டினார். எனினும் அவர் அந்த இரு முதலாளிகளின் பெயரை குறிப்பிடவில்லை.
மக்களவையில் ராகுல், அனுராக் காரசார வாதம்! ராகுல் காந்தியின் இந்த முழக்கத்துக்கு பதிலளித்த அனுராக் தாகூர், “குடும்ப திட்டம் குறித்து குறிப்பிடும் ராகுல் காந்தி தீதி, ஜிஜாஜி (சகோதரி- சகோதரி கணவர்) குறித்தும் பேச வேண்டும் என்றார். அதாவது பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வத்ராவை அவர் மறைமுகமாக கூறினார்.
இதையும் படிங்க: விவசாயிகளின் போராட்டம் அல்ல.. நாட்டு மக்களின் எழுச்சி இயக்கம்- ராகுல் காந்தி