மத்தியப் பிரதேசம், குவாலியாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் 50 வயதுடைய பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு (ஏப்.18) மருத்துவமனை ஊழியர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கரோனா நோயாளிக்கு பாலியல் வன்கொடுமை: மருத்துவ ஊழியர் கைது! - கரோனா நோயாளி
மத்திய பிரதேசம்: 50 வயது நிரம்பிய பெண் கரோனா நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து, இது குறித்து அப்பெண் தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த குடும்பத்தினர், அந்த ஊழியரை சராமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனிடையே, தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் மருத்துவமனை ஊழியரைக் கைது செய்தனர். தொடர்ந்து அப்பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவமனை மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:கரோனா தடுப்பூசியை கள்ளச் சந்தையில் விற்ற மருந்து நிறுவன ஊழியர்கள் கைது