பாட்னா: பிகார் மாநில கல்வித்துறை அமைச்சருக்கும், அத்துறையின் தலைமைக் கூடுதல் செயலாளருக்கும் இடையே உருவாகி உள்ள ஊடல், மகா கூட்டணியில் பூசலை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சி மாமன்ற உறுப்பினரும், லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய நண்பருமான சுனில் குமார் சிங், ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த ஒதுக்கீட்டுத் துறை அமைச்சர் அசோக் சவுத்ரியை, நிதீஷ் குமாருக்கும் துரோகம் செய்யத்தயங்க மாட்டார் என்று, அவர் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து உள்ளார்.
எதற்கும் ஒரு எல்லை உண்டு, இதே நிலை தொடர்ந்தால், கூட்டணி என்ற அணை உடைபடுவதை, யாராலும் தடுக்க முடியாது என்று, ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் டாக்டர். சுனில் சிங், காட்டமாகப் பதிலடி கொடுத்து உள்ளார்.
முன்னதாக, ஆர்ஜேடி எம்எல்சி சுனில் குமார் சிங், தனது முகநூல் பதிவின் மூலம் பிகார் அரசு அதிகாரிகளை மோசடி மற்றும் கொள்ளைக்காரர்களாக வர்ணித்து இருந்தார். இதுமட்டுமல்லாது, கல்விஅமைச்சர் சந்திரசேகர் சிங்கிற்கு, ஆதரவு அளிக்கும் வகையில் பதிவிட்டு இருந்தார்.
பிகார் முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவியின் சகோதரராக அறியப்பட்டவரும், ஆர்ஜேடி எம்எல்சியுமான சுனில் சிங், ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஒதுக்கீட்டுத் துறை அமைச்சர் அசோக் சவுத்ரி குறித்து கூறுகையில், ’’அசோக் சவுத்ரி தினமும் கட்சி மாறுகிறவர், அவர் பல கட்சிகளின் ருசியை அறிந்தவர். காங்கிரஸ் தலைவர் ராஜோ சிங் கொலையில் அசோக் சவுத்ரியின் பெயரும் அடிபட்டதாக’’ அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
’2025ஆம் ஆண்டுக்கு முன்னர் அசோக் சவுத்ரி தனது தலைவரை விட்டுவிட்டு தனக்கு நன்மை கிடைக்கும் இடத்திற்குச் செல்வார் என்று சுனில் சிங் கூறியுள்ளார். ஆர்ஜேடி எம்எல்சி சுனில் சிங் இத்துடன் நின்றுவிடாமல், சட்டப்பேரவையில் ராப்ரி தேவியை, அசோக் சவுத்ரி அவமானப்படுத்தியதாகக் கூறினார். அவரும் நிதீஷ்குமாரை ஏமாற்றுவார்.