ராஞ்சி:ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட நக்ஸலைட்டு ஜீவன் சரணடைந்தார். இவர் நக்ஸல் இயக்கத்தில் மண்டல கமாண்டராக செயல்பட்டவர்.
தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட நக்ஸல் சரண்! - நக்சலைட் கமாண்டர் ஜீவன்
தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டு காவலர்களால் கடந்த 10 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த நக்ஸலைட்டு ஒருவர் சரணடைந்தார்.
Wanted Naxal surrenders in Jharkhand's Ranchi
மேலும், மாநிலத்தில் தேடப்பட்டு வந்த நக்ஸலைட்டுகளில் இவரும் மிக முக்கியமானவராவார். இவர் மீது திருட்டு, பாலியல் பலாத்காரம், கொலை, கட்டாய வரி வசூல் மற்றும் நக்ஸல் ஆதரவு என 77 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
2009ஆம் ஆண்டு நக்ஸல் இயக்கத்தில் இணைந்த ஜீவன், கடந்த 10 ஆண்டுகளாக மேற்கு சிங்பூம் மற்றும் குந்தி மாவட்டத்தில் தீவிரமாக செயல்பட்டுவந்தார்.