தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு! - latest news

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு!
புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு!

By

Published : May 2, 2021, 9:03 AM IST

புதுச்சேரி மாநிலத்தின் 15-வது சட்டப் பேரவைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கைப் பணியில் 1,400 பேரும், வேட்பாளர்கள், முகவர்கள் தரப்பில் 1,500 பேர் வரையும், பாதுகாப்புக்காக காவல் துறையினர் 2,500 பேரும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 கட்டங்களாக தொகுதிகள் பிரித்து எண்ணப்படுவதனால் தேர்தல் முடிவுகள் வர நள்ளிரவு ஆகும் என தேர்தல் துறை அறிவித்துள்ளது.

23 தொகுதிகளுக்கு புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் அரசு கலைக்கல்லூரி, அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு தொழில் நுட்பக் கல்லூரி மையங்களிலும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு அங்குள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும், மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகளுக்கு, அங்குள்ள அரசு மண்டல நிர்வாக அலுவலக 6 மையத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாடு தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ABOUT THE AUTHOR

...view details