புதுச்சேரி: புதுச்சேரி கன்னியக்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை கிருஷ்ணன். அதேபகுதியில், டேங்க் ஆப்ரேட்டாக உள்ளார். இவருக்கு புதுச்சேரி - கடலூர் சாலையில் சொந்தமாக வணிக வளாகம் உள்ளது.
இந்த வளாகத்தில் ஐந்து தேன்பழம் மரங்கள் இருந்தன. இதில், காய்க்கும் பழங்களை அணில்கள், வௌவால்கள் வந்து சாப்பிடுவது வழக்கம். இதை செந்தாமரை கிருஷ்ணன் தினமும் கண்காணித்து வந்துள்ளார்.
வௌவால்களின் வழக்கம்
இந்நிலையில், அந்த தேன்பழம் மரங்கள் சமீபத்தில் வீசிய காற்றில் சாய்ந்தன. இதனால், வழக்கம்போல் வந்த வௌவ்வால்கள் அந்த பகுதியில் பழம் கிடைக்காமல் சுற்றித் திரிந்தன. இதைக்கண்ட செந்தாமரை கிருஷ்ணன் அங்குள்ள மதில் சுவர், காரின் மீது வாழைப்பழங்களை வைத்துள்ளார். அதை வௌவ்வால்கள் சாப்பிட்டு சென்றுள்ளன.