தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பீகாரில் கள்ளச்சாராய விவகாரத்தில் மாநில அரசு பலி எண்ணிக்கையை மறைக்கிறது: ஆர்.கே.சிங் - Violent opposition

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மாநில அரசு மறைத்துவருவதாக மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

பீகாரில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக ஆளுங்கட்சிக்கு கடும் எதிர்ப்பு
பீகாரில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக ஆளுங்கட்சிக்கு கடும் எதிர்ப்பு

By

Published : Dec 20, 2022, 9:27 AM IST

பீகார்: பாட்னா: பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் உயிரிழப்பு விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுமார் 200 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மாநில அரசு மறைத்துவருவதாக மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரால் ஒரு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை.

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களில் எத்தனை பேர் ஏழைகள். எப்படி மாநிலம் முழுவதும் மதுபானங்கள் மிக எளிதாக கிடைக்கிறது. இதுவதை கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்காக சிறையில் உள்ளவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?.

மாநில நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த சோகம் நடந்துள்ளது. ஒரு அரசின் கொள்கை முடிவு வெற்றிபெறவில்லை என்றால், அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். மதுவிலக்கை அமல்படுத்தவும், அதுதொடர்பான சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், மாநில அரசு முற்றிலும் தவறிவிட்டது. உள்ளூர் மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 200-க்கும் மேல் என்கின்றனர். ஆனால், மாநில அரசு குறைவாக தெரிவிக்கிறது. உண்மையான எண்ணிக்கையை மாநில அரசு மறைத்துவருகிறது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னை, கோவை உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் குத்தகைக்கு விடப்பட்டன

ABOUT THE AUTHOR

...view details