கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஹெஜாமாடி கிராம மக்கள், நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகில் புதிதாகச் சாலையை அமைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் பள்ளிப் பேருந்துகளுக்கும், கிராமவாசிகளின் உள்ளூர் வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணத்தை ரத்துசெய்யுமாறு கிராம மக்கள் கோரியுள்ளனர். ஆனால், அதற்குச் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், கடந்த மார்ச் 30ஆம் தேதியன்று, சுங்கச்சாவடி அருகில் புதிதாகச் சாலை ஒன்றை அமைத்தனர். இதனால், ஹெஜாமாடி, கோடி கிராம மக்கள், சுங்கச்சாவடிக்குச் செல்லாமலே எளிதாகப் பயணிக்கத் தொடங்கினர்.
சுங்கச்சாவடி அருகே புதிதாகச் சாலையை அமைத்த கிராமவாசிகள் மக்களின் தீவிரத்தைக் கண்ட நிர்வாகம், வேறு வழியின்றி ஹெஜ்மடி கிராமவாசிகள் பெயரில் பதியப்பட்ட அனைத்து வாகனங்களும் சுங்கச்சாவடி வழியாக இலவசமாகப் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிங்க:கரோனா பரசோதனைக்காக 2000 ஆய்வகங்கள்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்