தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புனித்ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய் - தீபாராதனை காட்டிய விஜய்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்துக்கு, நடிகர் விஜய் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தற்போது இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

புனித் ராஜ்குமார் நினைவிடத்துக்குச் சென்ற விஜய்
புனித் ராஜ்குமார் நினைவிடத்துக்குச் சென்ற விஜய்

By

Published : Feb 26, 2022, 3:37 PM IST

Updated : Feb 26, 2022, 4:14 PM IST

கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார் (Puneeth Rajkumar). அக்டோபர் 29ஆம் தேதி காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக புனித் ராஜ்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் உடல் மூன்று நாள்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள காண்டீவரா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது.

சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பலர் புனித் ராஜ்குமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அதே போல் நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன், ராம் சரண், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.கன்னட திரையுலகில் 49 படங்கள் நடித்த புனித் ராஜ்குமார், கண்தானம் உள்ளிட்ட பல்வேறு பொதுநலப்பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

தீபாராதனை காட்டிய விஜய்

இந்நிலையில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்துக்கு, நடிகர் விஜய் இன்று (பிப்ரவரி 26) நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் தீபமேற்றி அவர் வணங்கினார். புனித்தின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவியும், விஜய் மரியாதை செலுத்தினார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், காணொலிசமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

புனித்ராஜ்குமாருக்கு, விஜய் அஞ்சலி செலுத்தியது தொடர்பான காணொலி
புனித் ராஜ்குமார் நினைவிடத்துக்குச் சென்ற விஜய்

முன்னதாக நெல்சன் இயக்கத்தில் உருவாகிவந்த 'பீஸ்ட்' படப்பிடிப்பில் கலந்து கொண்டு, விஜய் பிஸியாக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சினிமா துறையில் 12 ஆண்டுகள் - சமந்தாவின் கிளிக்ஸ்!

Last Updated : Feb 26, 2022, 4:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details