தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Vignesh Shivan - Nayanthara: உயிர், உலகத்தோடு ஓணம் கொண்டாடிய விக்னேஷ்- நயன்தாரா தம்பதி.. வைரலான புகைப்படங்கள் !

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியர் தங்கள் குழந்தைகளுடன் முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடி வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உயிர், உலகத்தோடு ஓணம் கொண்டாடிய விக்னேஷ்- நயன்தாரா தம்பதி.. வைரலான புகைப்படங்கள் !
ஓணம் கொண்டாடிய விக்னேஷ்- நயன்தாரா தம்பதி(கோப்புப்படம்)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 2:31 PM IST

ஹைதராபாத்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதிகள் தங்கள் குழந்தைகள் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "என்னுடைய உயிர் மற்றும் உலகத்துடன் முதல் ஓணம், எங்களுக்கு திருவிழா முன்னமே தொடங்கியது. அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, அக்டோபர் மாதம் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனர். உயிர் ருத்ரோ நீல் மற்றும் உலக் தெய்வக் என தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவே கோலாகலமாக காணப்பட்டு வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் ஓணம் புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஓணம் பண்டிகை முன்னிட்டு, நடிகர் விக்னேஷ் சிவன், தனது இரட்டைக் குழந்தைகளுடன் வீட்டில் கொண்டாடப்பட்ட க்யூட்டான ஓணம் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். மேலும், இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:திராவிடம் ஒழிப்பு மாநாடு.. யூடியூப் புகழ் பாரிசாலன் உள்பட 500 பேர் கைது!

மேலும், விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தில் குழந்தைகள் உயிர் மற்றும் உலகம் இருவரும், வாழை இலை முன்பு அமர்ந்து உணவு சாப்பிடுகின்றனர். ஓணம் சிறப்பு வகை உணவுகளுடன், குழந்தைகளை மடியில் அமர வைத்து உணவ உண்ணும் படியான இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “அட குழந்தைகள் அதுக்குள்ள இவ்ளோ வளர்ந்துட்டாங்களே” என பதிவிட்டு வருகின்றனர். நயந்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியின் குழந்தைகளது புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும், இந்த புகைப்படங்கள் பலரது மனதையும் கவர்ந்த நிலையில், குழந்தைகளுக்கு ரசிகர்கள் தங்கள் அன்பை பகிர்ந்து வருகின்றனர்.

நயன்தாரா மற்றும் அவரது குழந்தைகள் புகைப்படங்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து, நயன்தாரா ஷாருக்கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகி உள்ள “ஜவான்” திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவானது, இந்த மாத கடைசியில் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக ஷாருக்கான் சென்னை வருகை தர இருக்கிறார் எனக் கூறப்பட்டு உள்ளது. ஜவான் படத்திலிருந்து வெளியான “சாலேயா” என்ற பாடலுக்கு புகழ்பெற்ற ஃபரா கான் நடனம் அமைத்துள்ளார். இசையமைப்பாளர் அனிரூத் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இதையும் படிங்க:கல்லூரியில் மாணவியாக பங்கேற்ற அமைச்சர் கீதா ஜீவன்.. தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி கல்லூரி பொன்விழாவில் நெகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details