‘‘ஆன்மிக தெற்கு, உலகளாவிய தொடர்புகள் உச்சிமாநாடு - 2025ம் ஆண்டுக்குள் ஒரு கோடி கோடி ரூபாய் (அதாவது, 1.5 டிரில்லியன் டாலர்) பொருளாதாரத்தை நோக்கி’ என்ற தலைப்பில் இந்திய தொழில் கூட்டமைப்பு(சிஐஐ) நடத்திய நிகழ்ச்சியில் இன்று (செப்.23) காணொலி காட்சிமூலம் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றினார்.
அப்போது, "இந்தியா இப்போது பொருளாதார வளர்ச்சியை மீண்டும் பெறுவதில் முக்கியமான கட்டத்தில் உள்ளது. நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் தொழில்துறை அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தென்னிந்தியா ‘வேற்றுமையில் ஒற்றுமை’ ('Unity in Diversity') என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கல்வி, கலாசாரம், சேவை ஆகியவற்றில் தென்னிந்தியா வேற்றுமையில் ஒற்றுமையோடு செயல்படுகிறது. தென்னிந்தியா 2025 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி கோடி ரூபாய் (அதாவது, 1.5 டிரில்லியன் டாலர்) பொருளாதாரத்தை அடைவது நிச்சயம் சாத்தியமானது.