அருணாசலப் பிரதேச சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்ற சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது, " வட கிழக்குப் பிராந்தியம் நீண்ட காலப் பிரச்னைகளுக்கு தீர்வை கண்டுபிடித்து, புதிய எதிர்காலத்தை நோக்கி பயணிப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
கடந்த சில ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இப்பகுதியின் சமூக பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டே அரசு திட்டங்களை தீட்டிவருகிறது.