டெல்லி : ஜனநாயக கோவில்களில் இடையூறு மற்றும் குழப்பத்தை அரசியல் யுக்தியாக ஆயுதமாக்க முடியாது என்று துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்து உள்ளார். டெல்லியில் உள்ள ஜாமீய மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அவர், ஜனநாயகம் என்பது பொது நலனை பாதுகாப்பதற்கான உரையாடல், விவாதம் போன்றது என்றும் நிச்சயமாக சீர்குலைவு மற்றும் இடையூறாக இருக்க முடியாது என்று தெரிவித்தார். ஜனநாயகத்தின் கோவில்களை களங்கப்படுத்துவதின் வழிமுறையாக இடையூறு மற்றும் சீர்குழைவுகள் ஆயுதமாக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை சுட்டிக்காட்டுவதில் தான் வேதனை அடைவதாகவும் கூறினார்.
தேசத்தை உருவாக்குவதில் மனித வளத்தை மேம்படுத்துவது என்பது முக்கிய அங்கம் என்றும் அவர் கூறினார். மேலும் இளைஞர்கள் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அது அரசியல் போதையால் இருக்கக் கூடாது என்றாற். திறன் மேம்பாடு மற்றும் ஆளுமை வளர்ச்சியின் மூலம் ஆரோக்கியமான சூழலையும் சமூகத்தையும் வளர்ப்பதற்கான உறுதியான நோக்கத்துடன் மாணவர்கள் பயணிக்க வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.
நாட்டின் சில பகுதிகளில் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கான தேவை ஏற்பட்டு உள்ளதாக கூறினார். தேசிய கல்விக் கொள்கையின் மூலம் திறன் அடிப்படையிலான படிப்புகள், தொழில் பயிற்சி மற்றும் கல்வி கற்றலுக்கு புதிய பரிமாணத்தை பெற முடியும் என்றும் அது மாணவர்களை கண்டுபிடிப்பாளர்களாகவும் தொழில்முனைவோராகவும் மாற்றுவதில் முக்கிய பங்காற்றுன் என்று தெரிவித்தார். உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்கு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க :மணிப்பூரில் மற்றொரு கொடூரம்.. சுதந்திர போராட்ட வீரரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை!