டெல்லி:குடியரசு துணைத்தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், 16ஆவது குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசு துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 6-ல் குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
இந்திய குடியரசு துணைத்தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
EC
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 5ஆம் தேதி தொடங்கி, ஜூலை 19ஆம் தேதி முடிவடையும் என்றும்; ஜூலை 20ஆம் தேதி வேட்புமனு மீது பரிசீலனை நடைபெறும் என்றும்; வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஜூலை 22 - ஆகஸ்ட் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே குடியரசுத்தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது.