டெல்லி:அயோத்தி ராமர் கோயிலுக்கு நிதி திரட்டும் வகையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத், ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையுடன் இணைந்து நாடு தழுவிய பரப்புரையை முன்னெடுக்கிறது.
இந்த நிதி திரட்டும் பரப்புரை 2021ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 27ஆம் தேதி நிறைவடைகிறது. இது தொடர்பாக டிசம்பர் முதல் வாரம் பிகார் தலைநகர் பாட்னாவில் ஆலோசனை நடக்கிறது.
இதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை, ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் சந்திக்கின்றனர். ராமர் கோயிலுக்கு நிதி திரட்டும் பொருட்டு 4 லட்சம் கிராமங்களில் உள்ள 11 கோடி மக்களை இவர்கள் சந்திக்கவுள்ளனர்.
இது குறித்து வெளியான தகவலின்படி, ரூ.10, ரூ.100, ரூ.1,000 என நன்கொடை ரசீதுக்கள் இருக்கும் எனவும், ரூ.2,000 நன்கொடைக்கு முறைப்படி ரசீது வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ராம ஜென்ம பூமியிடமிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை திருப்பியளித்த எஸ்பிஐ