தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எழுத்தாளர் வரவர ராவுக்கு தொடர் சிகிச்சை அளிக்க உத்தரவு - மாவோயிஸ்டுகள்

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவிஞர் வரவர ராவ், வரும் 14ஆம் தேதி வரை சிகிச்சையில் இருப்பார் என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கவிஞர் வரவர ராவ்
கவிஞர் வரவர ராவ்

By

Published : Dec 3, 2020, 10:06 PM IST

மும்பை (மகாராஷ்டிரா):கடந்த 2018 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டத்தில் உள்ள பீமா கோரேகானில் வன்முறையை தூண்டியதாகவும், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறி சமூக செயற்பாட்டாளரும், கவிஞருமான வரவர ராவ் (81) கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப்பின் குணமடைந்தார். சமீபத்தில் அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, நரம்பு சார்ந்த பிரச்னை மற்றும் கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை பெற வரவர ராவுக்கு அனுமதி வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 18ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்த அறிக்கையினை மருத்துவமனை நிர்வாகம் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஷின்டே, கார்னிக் ஆகியோர் முன்னிலையில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின்படி வரவர ராவ்வின் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அவர் வரும் 14ஆம் தேதி வரை சிகிச்சையில் இருப்பார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வழக்கை ரத்து செய்யக்கோரி மும்பை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள கங்கனா!

ABOUT THE AUTHOR

...view details