தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு - மர்ம நபர்களை அடையாளம் கண்டதாக ரயில்வே அறிவிப்பு...

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசிய மர்ம நபர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்

By

Published : Jan 5, 2023, 10:48 PM IST

கொல்கத்தா:மேற்கு வங்கம் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் திட்டத்தை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஹவுராவில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் நியூ ஜல்பைகுரி வரை செல்கிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை மல்டாஸ் குமாரகஞ்ச் பகுதியில் வழக்கமான சேவையில் ஈடுபட்ட ரயில் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசினர். இதில் வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவம் பெரும் பூதாகரத்தை கிளப்பிய நிலையில், ரயில்வே போலீசார் ரயிலில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் சிறுவர்கள் உள்பட 7 பேர் ரயில் மீது கற்கள் வீசியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசிய நபர்களை ரயில்வே போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசியவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அஞ்சலி இறப்பில் தொடரும் மர்மம்: வழக்கில் 7 பேருக்கு தொடர்பு என போலீஸ் பகீர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details