தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொல்கத்தாவில் வானதி சீனிவாசன் கைது செய்யப்பட்டது ஏன்?

கொல்ககத்தா: மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

By

Published : May 8, 2021, 11:29 AM IST

Vanathi Srinivasan
வானதி சீனிவாசன்

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியிடம், மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தது கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல இடங்களில் திரிணாமுல் கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், பாஜகவை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க வன்முறையை கண்டித்து அம்மாநில தலைநகர் கொல்கத்தாவில் நேற்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பா.ஜ.க மகளிர் அணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், பா.ஜ.க எம்.பி. ரூபா கங்குலி, மேற்கு வங்க மாநில பா.ஜ.க மகளிர் அணித் தலைவர் அக்னிமித்ரா பால் உள்பட அனைவரையும் அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கொல்கத்தாவில் வானதி சீனிவாசன் கைது

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ''மேற்கு வங்கத்தில் அமைதியான போராட்டங்கள் கூட தவறா? மம்தா பானர்ஜி இப்படி தான் தனது அரசாங்கத்தை நடத்துகிறாரா?" என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details