டெல்லி:உலக சுகாதார நிறுவனம் நேற்று உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்த கரோனா இறப்பு குறித்த கணக்கீடை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் கரோனாவால் மொத்தம் 14.9 மில்லியன் மக்கள் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த கரோனா ஊரடங்கு மக்களின் சுகாதார கட்டமைப்பை முற்றிலுமாக மாற்றி அமைத்ததாகத் தெரிவித்துள்ளது. இதன் பட்டியலில் இந்தியாவில் இதுவரை 4.7 மில்லியன் பேர் இறந்துள்ளதாக இருந்தது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள இந்தப் பட்டியல் முற்றிலும் தவறானது என இந்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்தப்பட்டியலில் குறிப்பிட்ட கணக்கீடுகளின்படி, இந்தியாவில் 4.7 மில்லியன் கரோனா இறப்பு நிகழ்ந்துள்ளது என்பதை தவறாக கணித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஜனவரி 2020 முதல் டிசம்பர் 2021 வரை கரோனாவால் இறந்தவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் மத்திய அரசால் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனாவால் இறந்திருப்பதாகக் கூறியுள்ளது.
இதனையடுத்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதில் இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 47 லட்சத்துக்கும் மேல் இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக உள்ளது. இந்நிலையில் இதனை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. WHO வின் கணக்கீடும், அவைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரிகள் குறித்துமான உண்மைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பயனுள்ள மற்றும் வலுவான சட்ட அமைப்பு மூலம் சேகரிக்கப்பட்ட இறப்பு தரவுகளின் பட்டியலை இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டாம் நிலை நாடுகளின் வரிசையிலும் இந்தியா இடம்பிடிக்காது. இதுகுறித்த இந்தியாவின் வாதத்திற்கு, உலக சுகாதார நிறுவனம் இன்றுவரை பதிலளிக்கவில்லை.
உலக சுகாதார நிறுவனத்தின் இந்த கணக்கீடும் முறையானது, ‘தரவு சேகரிப்பின் புள்ளியியல் ரீதியாக ஆதாரமற்ற மற்றும் அறிவியல் பூர்வமான கேள்விக்கு உட்பட்ட வழிமுறையை பிரதிபலிக்கிறது’. இதன்மூலம், இந்தியாவில் அதிகப்படியான இறப்பு கணிப்புகளை உருவாக்குவதற்காகவே இந்த கணித முறை பயன்பட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து, அதிகப்படியான இறப்பு மதிப்பீடுகளைக் கணிக்க, கணித மாதிரிகளைப் பயன்படுத்துவதை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது. இவ்வாறு தெரிவித்து இறப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கரோனோ