தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோயில் கூட்ட நெரிச‌லில் 14 பேர் உயிரிழப்பு; தலா ரூ.12 லட்சம் நிவாரணம்

வைஷ்ணவி தேவி கோயில் கூட்ட நெரிச‌ல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 12 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

pm modi,  J&K LG Manoj Sinha
pm modi, J&K LG Manoj Sinha

By

Published : Jan 1, 2022, 9:38 AM IST

டெல்லி:புத்தாண்டை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலில் நேற்றிரவு சிறப்பு தரிசனம் நடைபெற்றது. இந்த தரிசனத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 14 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சோக சம்பவத்திற்கு, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இதனிடையே, காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு சார்பில், உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிர ரூபாயும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, மொத்தமாக ரூ.12 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தகவலில், தரினசத்தின்போது இரு பிரிவினரிடையே தள்ளுமுள்ளு காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பின்னால், வந்த பக்தர்கள் ஒருவரை ஒருவர் இடித்துதள்ளி, உயிரிழப்பு ஏற்பட்டாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வைஷ்ணவி தேவி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details