தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கோவிட் தடுப்பூசி செலுத்துங்கள், நோய்த் தொற்றை தவிருங்கள்'- புதுச்சேரி சுகாதாரத்துறை - Covid Vaccine

புதுச்சேரி: கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பெருமளவில் நோய்த் தொற்றை தவிர்க்கலாம் என புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

Breaking News

By

Published : Mar 23, 2021, 4:04 PM IST

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (மார்ச் 23) புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரியில், நேற்று (மார்ச் 22) 1,972 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், புதிதாக 87 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை பெற்றுவந்த 84 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த மாதத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால், புதுச்சேரி மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எனவே, மக்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பெருமளவில் நோய்த் தொற்றை தவிர்க்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details