டேராடூன் (உத்தரகாண்ட்): உத்தரகாண்ட் மாநில போலீசார் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வை விளக்கும் விதமாக “உத்தரகாண்ட் சைபர் காமிக்ஸ்” என்பதை இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதல்முறையாக, தொடங்கி உள்ளனர். இந்த திட்டத்தின் படி, இந்த காமிக்ஸ் ஆனது செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) மூலம் உருவாக்கப்பட்டு கற்பனை கதாபாத்திரமாக “சூப்பர்காப் சக்ரேஷ்” (Supercop Chakresh) என்பவரை அடிப்படையாகக் கொண்டு “சக்ரேஷ் கி கஹானியன்” (Chakresh Ki Kahaniyan) என்ற பெயரில் வாரந்தோறும் திங்கட்கிழமை சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வோடு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்களை சிறப்பு அதிரடி படை காவலர் ஆயுஷ் அகர்வால் கவனித்து வருவதாகவும் அதே சமயம், இணைய வழி விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய அவசியத்துக்கும், முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. உத்தரகாண்ட் போலீசார் தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ள இந்த “உத்தரகாண்ட் சைபர் காமிக்ஸ்” திட்டத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், உதவி காவல் கண்காணிப்பாளர் அனுகூஷ் மிஷ்ரா இந்த காமிக்ஸ் செயற்கை நுண்ணறிவு பிரிவில் காட்டூன்கள் வரையும் பிரிவில் உள்ளார். இந்த காமிக்ஸ் கதையை அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வர முயல்வதாக தெரிவிக்கின்றனர். மேலும், உத்தரகாண்ட் சைபர் கிரைம் காவல் நிலையத்துக்கும், தேசிய சைபர் கிரைம் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
மேலும், இதுகுறித்து ஆயுஷ் அகர்வால் கூறும்போது, “இந்த கற்பனை கதைகள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை வழங்க முடியும் என்றார். இந்த கற்பனை கதாபாத்திரமான சக்ரேஷ் சைபர் கிரைம் குழுவுடன் இணைந்து குற்றவாளிகளுக்கு எதிராக போராட உள்ளார் எனவும், இந்த கதையானது மக்களை உணர்வுப்பூர்வமாக இணைக்கும் எனக் கூறினார். மேலும், இந்த “சைபர் கிரைம் காமிக்ஸ்” அனைத்து சைபர் கிரைம் காவல்நிலையத்திலும், சமூக வலைதளங்களிலும் பதிவிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence): செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். தற்போது இதன் மூலம் மனிதன் நினைக்கும் செயலை மிக எளிமையாகவும் சிறிய நேரத்தில் செய்ய முடியும். மேலும், இது கணினியோடு ஒன்றிணைந்து செயலை செய்யக்கூடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் நல்ல ஆதரவையும் இத்துறை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"நிதிஷ்குமாருக்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசை உள்ளது" - முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி!