தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பனிப்பாறை வெடித்து பத்து பேர் மரணம், எட்டு பேர் மாயம் - உத்தரகண்ட்

உத்ரகாண்ட் பகுதியில் பனிப்பாறை வெடித்ததில் பத்து பேர் உயிரிழந்தனர். எட்டு பேர் மாயமாகியுள்ளனர்.

பனிப்பாறை வெடித்து பத்து பேர் பலி -  எட்டு பேர் மாயம்
பனிப்பாறை வெடித்து பத்து பேர் பலி - எட்டு பேர் மாயம்

By

Published : Apr 25, 2021, 7:52 AM IST

சாமோலி மாவட்டத்தில் இந்தியா-சீனா எல்லைக்கு அருகிலுள்ள சம்னா கிராமம் உள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பனிப்பாறை இன்று (ஏப்ரல் 24) திடீரென வெடித்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ராணுவ வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த ராணுவ வீரரகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பனிப்பாறைக்குள் சிக்கி 384 பேரை மீட்டனர்.

இந்தச் சம்பவ இடத்தில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர், எட்டு பேர் மாயமாகியுள்ளனர். மேலும், காயமடைந்தர்களை மீட்டு விமானத்தில் ஏற்றுவதற்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் ஏற்றிச்சென்று ஜோஷிமா பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துவருகின்றனர். காணாமல்போன மற்றவர்களை ராணுவ வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் ஊரடங்கு: தமிழ்நாடு - கர்நாடக இடையே பேருந்து இயக்கம்!

ABOUT THE AUTHOR

...view details