டேராடூன்:உத்தரப்பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து உத்ரகாண்டிலும் பெருவாரியான இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. உத்ரகாண்டில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 47 இடங்களை வென்று அக்கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது.
பாஜக ஆட்சியைக் கைப்பற்றினாலும், அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, தான் போட்டியிட்ட ஹதிமா தொகுதியில் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
இந்நிலையில், புஷ்கர் சிங் தாமியும், அவரது அமைச்சரவையும் இன்று தங்களது ராஜினாமா கடிதத்தை உத்ரகாண்ட் ஆளுநர் குர்மித் சிங்கிடம் ஒப்படைத்துள்ளனர்.