தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் யோகி ஆதித்யநாத்... - 5 மாநில தேர்தல் முடிவுகள்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 272க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக வெற்றி முகத்தில் உள்ளது.

உ.பியில் மீண்டும் யோகி ஆட்சி?
உ.பியில் மீண்டும் யோகி ஆட்சி?

By

Published : Mar 10, 2022, 11:58 AM IST

உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(மார்ச்.10) காலை 8 மணிக்கு தொடங்கியது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது. மீதமுள்ள உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 272க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு 202 தொகுதிகள் தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக வெற்றி முகத்தில் உள்ளது. . உத்தரப் பிரதேச வரலாற்றில் ஐந்து ஆண்டுகள் முதலமைச்சராக ஆட்சியில் இருந்த பின் மீண்டும் முதலமைச்சராகத் தேர்வாகும் பெருமையை யோகி ஆதித்யநாத் பெற உள்ளார்.

முதலமைச்சராகத் தேர்வாகும் பெருமையை யோகி ஆதித்யநாத்

பாஜக முன்னிலை

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக 272 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்து வலுவான நிலையில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 118, பகுஜன் சமாஜ் கட்சி 5, காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

கோரக்பூரில் யோகி முன்னிலை

கோரக்பூரில் யோகி முன்னிலை

தேர்தல் ஆணையத்தின் முதல் கட்ட தகவல்களின் படி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். யோகி ஆதித்யநாத் போட்டியிடும் முதல் சட்டப்பேரவை தேர்தல் இதுவாகும். இருப்பினும் இதே பகுதியிலிருந்து மக்களவைக்குப் பலமுறை தேர்வாகியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பாஜக வலுவான முன்னிலை

உன்னாவில் பாஜக முன்னிலை

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் தொகுதியில் பாஜக வேட்பாளர் பங்கஜ் குப்தா, காங்கிரஸ் வேட்பாளர் ஆஷாசிங்கை காட்டிலும் முன்னிலை பெற்று வருகிறார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ்யாதவ் கர்ஹல் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். கர்ஹல் தொகுதியில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை அகிலேஷ் பெற்றிருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் எஸ்.பி.சிங் பாகேல் 6 சதவீத ஓட்டுகளையும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் 1 சதவீத ஓட்டுகளையும் மட்டுமே பெற்றுள்ளனர்.

உத்தரப் பிரதேச தேர்தல் பாஜக முன்னிலை

ஜஸ்வந்த்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் ஷிவ்பால் சிங் யாதவ் பின்னடைவை சந்தித்திருக்கிறார். திங்கட் கிழமை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமான முடிவுகளைக் கணித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேர்தல் முடிவுகள் 2022: நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை

ABOUT THE AUTHOR

...view details