தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 12, 2021, 10:12 AM IST

ETV Bharat / bharat

சைபர் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ள அமெரிக்க தொழில் நுட்பக் குழு

உத்தரகாண்ட் மாநிலம், ஜம்தாராவில் அதிகரித்துவரும் சைபர் குற்றங்கள் தொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் நுட்பக் குழு ஆய்வு செய்யவுள்ளது.

சைபர் குற்றங்கள்
சைபர் குற்றங்கள்

டேராடூன்:இந்தியாவிலேயே அதிகபட்சமாக உத்தரகாண்ட் மாநிலம், ஜம்தாரா நகரில் சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன. எனவே, இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் நுட்பக் குழு, ஜம்தாராவில் மிகப்பெரிய அளவில் ஆய்வு நடத்தவுள்ளது. சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, அம்மாநில காவல் உயர் அலுவலர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழில் நுட்ப ஆய்வுக்குழு ஜம்தாரா நிர்வாகக் குழுவுடன் இணைந்து சைபர் குற்றங்களைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது. ஜம்தாராவில் பெரும்பாலானக் குற்றங்கள், நன்கு படித்த, பள்ளிப் படிப்பை இடையிலேயே கைவிட்ட நபர்களால் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. பெரும்பாலான இணையவழிக் குற்றங்களில், குற்றவாளிகள் மக்களைத் தொடர்பு கொண்டு தங்களை வங்கி மேலாளர் எனக் கூறி, அவர்களது தனிநபர் தகவல்களைத் திருடுகின்றனர்.

மாநில அரசும், நகர நிர்வாகமும் இணைந்து சைபர் குற்றங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், பலனளிக்காத நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினரை வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கல்வி கற்க தினமும் 24 கி.மீ., பயணம்... விளிம்பு நிலை வாழ்க்கையிலிருந்து விளம்பரத் தூதரான பெண்!

ABOUT THE AUTHOR

...view details