ஜம்மு-காஷ்மீர்:ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் நேற்று (ஆகஸ்ட் 11) நள்ளிரவில் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் விசாரணையில் கொல்லப்பட்ட தொழிலாளி பீகாரைச் சேர்ந்த முகமது அம்ரீஸ் என தெரியவந்தது.
பயங்கரவாதிகளால் சுடப்பட்ட முகமது அம்ரீஸ் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அவரை ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.