தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருமணம் செய்துகொண்ட கல்லூரித்தோழிகள் - இருவரையும் சரமாரியாகத் தாக்கிய பெற்றோர்! - உத்தரபிரதேசம்

கல்லூரித்தோழிகள் திருமணம் செய்து கொண்டதை அறிந்த பெற்றோர், இருவரையும் சரமாரியாகத் தாக்கினர்.

girls
girls

By

Published : Jun 30, 2022, 10:10 PM IST

மீரட்: உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கல்லூரியில் ஒன்றாகப் படித்து வருகின்றனர். கல்லூரி நண்பர்களான இருவரும் நொய்டாவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது.

ஓராண்டு சேர்ந்து வாழ்ந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை சட்டப்பூர்வமான பதிவு செய்வதற்காக நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெண்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வந்து, அங்கே இருவரையும் சரமாரியாக அடித்துள்ளனர். பிறகு இருவரையும் தனித்தனியே அழைத்து அறிவுரை வழங்கினர்.

ஆனால், பெண்கள் இருவரும் பிடிவாதமாக இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, இருவரையும் அவரவர் வீடுகளுக்கு அழைத்துச்சென்றனர். இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறினாலும், அவர்களிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் எப்.ஐ.ஆர் பதிவுசெய்வதில் தாமதம் கூடாது!

ABOUT THE AUTHOR

...view details