சஹாரன்பூர்:உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நேற்று (அக்.29) நிதின் என்பவர் அவரது மாமியார் பயல்( 45) மற்றும் அவரது மனைவி ரித்திகா (20) ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பயல் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். ரித்திகா பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் தரப்பில், "நிதின்-ரித்திகா தம்பதி இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக பல முறை தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே செப்டம்பர் மாதம் ரித்திகா, சஹாரன்பூரில் உள்ள அவரது தாயார் பயல் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் நிதினின் குடும்பத்தார் ரித்திகா வீட்டிற்கு சென்று சமாதானம் பேசியுள்ளார். ஆனால், ரித்திகா வர மறுத்துள்ளார்.