தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

UP POLLS: நரேந்திர மோடியின் பரப்புரை பயணம் ரத்து

உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூட்டம் ஒன்றில் பங்கேற்க இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக அவரின் பயணம் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Modi cancelled Bijnor visit
Modi cancelled Bijnor visit

By

Published : Feb 7, 2022, 1:27 PM IST

பிஜ்னோர்: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் பாஜக சார்பில் பரப்புரை கூட்டம் நடைபெற இருந்தது.

இக்கூட்டத்தில் பங்கேற்க நரேந்திர மோடி, பிஜ்னோரில் உள்ள வர்த்மான் கல்லூரிக்கு வருவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. அங்கு, அவர் பாஜக தொண்டர்கள் மத்தியில் காலை 11.20 மணியளவில் உரையாற்ற இருந்தார்.

காணொலி வாயிலாக பங்கேற்ற மோடி

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த மோடியின் பயணம் மோசமான வானிலை காரணமாகரத்துசெய்யப்பட்டது. தற்போது, அவர் காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் உரையாற்றினார். மேலும், இதில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகியும் பங்கேற்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

நரேந்திர மோடியின் உரையைக் கேட்பதற்கு வசதியாக 75 இடங்களில் (காணொலி வாயிலாக) பாஜக ஏற்பாடுசெய்திருந்தது. முன்னதாக, தேர்தல் ஆணையம் பரப்புரை கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதன் மூலம் இங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10இல் நடைபெற இருக்கிறது.

இதையும் படிங்க: Budget Session: பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலுரை!

ABOUT THE AUTHOR

...view details