லக்னோ(உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லத்திலிருந்து வியாழக்கிழமை, பஞ்சரான காரில் ஓர் அமைச்சரின் கார் ஓட்டுநரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இறந்தவர் உத்தரப்பிரதேச விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிஷ் சந்திர யாதவின் ஓட்டுநர் என்றும், நேற்று(செப்.21) முதல் அவர் வீட்டிற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது கவுடம்பள்ளி காவல் நிலைய காவல் துறையினர் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதேநேரம், இறந்தவரின் உறவினர்கள் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகப் புகார் அளித்துள்ளனர்.
காவல் துறையினருக்குக் கிடைத்த தகவலின்படி, இறந்தவர் பச்ரவான் ரேபரேலியைச் சேர்ந்த ராஜேஷ் திவேதி (45). இவர் கவுதம்பள்ளி காவல் நிலையத்துக்கு உட்பட்ட தில்குஷா காலனி கிராசிங் அருகே வாகனத்தில் இறந்து கிடந்துள்ளார்.
ராஜேஷ், தொழிலில் டிரைவராக இருந்து, டிராவல்ஸ் ஏஜென்சியில் வாகனம் ஓட்டி வருகிறார். ராஜேஷின் மகன் சுதன்ஷு கூறுகையில், தனது தந்தை யோகி அரசில் அமைச்சர் கிரிஷ் சந்திர யாதவின் டிரைவராக இருந்ததாகவும், கடந்த ஒரு மாதமாக அவருக்கு பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது, லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகரில் வசித்து வந்துள்ளார்.