தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காதலியுடன் லடாக் செல்ல பணம் தராததால் அத்தையைக் கொன்ற நபர்... உ.பி.யில் கொடூரம் - latest tamil news

உத்தரப்பிரதேசத்தில் காதலியை கூட்டிக்கொண்டு லடாக்கிற்கு செல்ல பணம் தராத அத்தையை சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லடாக் செல்ல பணம் தராததால் அத்தை அடித்து கொலை
லடாக் செல்ல பணம் தராததால் அத்தை அடித்து கொலை

By

Published : Jan 30, 2023, 3:00 PM IST

புலந்த்ஷஹர்: உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷஹர் பகுதியைச் சேர்ந்தவர், கஜ்வீர் சிங். இவர் மோதி நகர் பகுதியில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்று வீடு திரும்பிய போது, அவரது மனைவி சத்விரி என்பவர், வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் விசாரணை நடத்தினர்.

மோப்ப நாய் கொண்டு கொலை நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் மாடியில் இருக்கும் சத்விரியின் அண்ணன் மகனான சாகரின் அறைக்கு சென்ற நாய் அவரை பார்த்து குரைத்துள்ளது. இதானல் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், சாகரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், முதலில் தன் அத்தையை கொலை செய்தது, அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் தான் என குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் காவல் துறையினர் அவரது சட்டையில் இருந்த ரத்தக் கறையைக் கண்டு மீண்டும் விசாரித்த போது, தனது அத்தையைக் கொலை செய்தது தான் தான் என ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், காதலியை கூட்டிக்கொண்டு லடாக் செல்ல அத்தையிடம் பணம் மற்றும் அவரது காரை கேட்டபோது, அவர் தர மறுத்ததால் சுத்தியலால் அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் பின் கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சத்விரியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:போலீஸ் எனக் கூறி 17 வயது மாணவி வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details